ரியோ செகோவியா, கேப் ஆறு, [1] அல்லது யாரா ஆறு, என்பது வடக்கு நிகரகுவா மற்றும் தெற்கு ஒண்டுராசின் எல்லையில் அமைந்துள்ள ஒரு ஆறாகும். இது 841 கி. மீ (523 மைல்) நீளம் கொண்ட மத்திய அமெரிக்க குறுநில இணைப்புப் பகுதிக்குள் முழுவதுமாக ஓடும் மிக நீளமான ஆறாகும் [2]

பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை நிகரகுவாவைக் கடக்கும் இடத்திற்கு அருகிலுள்ள சோமோட்டோ கனியன் தேசிய நினைவுச்சின்னத்தில் இந்த நதி உருவாகிறது, மேலும் 841 கி. மீ (523 மைல்) தொலைவிற்குத் தாழ்வான மலைப்பாங்கான நிலப்பரப்பில் பாய்கிறது. கரீபியன் கடலுக்குள் கபோ கிராசியாஸ் அ டியோஸ் என்ற இடத்தில் உட்புகுகிறது. இடைப்பகுதி மற்றும் தாழ் பகுதிகள் ஹோண்டுராஸ்-நிகரகுவா எல்லையை உருவாக்குகின்றன.

செப்டம்பர் 7, 2007 அன்று, வகை 5 ஃவீலிக்ஸ் சூறாவளி கரையைக் கடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு ரியோ கோகோ சாதாரண நிலையை விட 11 மீட்டர்கள் (36 அடி) அளவு உயர்ந்து இருப்பதாக முக்கிய சர்வதேச செய்தி நிறுவனமான வயர் தெரிவித்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. [htt://chestofbooks.com/travel/reference/World-Gazetteer/Cape-River-Capua.html Cape River-Capua], Chest of Books website, accessed 8 March 2010.
  2. Aragón R., William. "Desentrañando el Gran Cañón" (in Spanish). La Prensa இம் மூலத்தில் இருந்து 2007-08-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070807123206/http://www-ni.laprensa.com.ni/archivo/2006/marzo/09/servicios/guiaturistica/92982.shtml. பார்த்த நாள்: 2007-08-08. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகோ_ஆறு&oldid=3452717" இலிருந்து மீள்விக்கப்பட்டது