கோங் தீவு
கோங் தீவு (Khong Island) அல்லது தான் கோங் (லாவோ: ດອນໂຂງ) என்பது தெற்கு லாவோஸின் சம்பாசக் மாகாணத்தில் கோங் மாவட்டத்தில் உள்ள மெக்கொங் ஆற்றில் அமைந்துள்ள சி பான் டான் ஆற்றங்கரை தீவுக்கூட்டத்தின் மிகப்பெரிய தீவு மற்றும் நிர்வாக இடமாகும்.[1]
இந்தத் தீவு 18 கிலோமீட்டர்கள் (11 mi) (வடக்கு-தெற்கு) நீளமுடையது. இதனுடைய அகலமான பகுதி 8 கிலோமீட்டர்கள் (5.0 mi) ஆகும். இதன் மக்கள்தொகை முக்கியமாக முவாங் சான் (மேற்கு) மற்றும் முவாங் காங் (கிழக்கு) ஆகிய இரண்டு கிராமங்களில் குவிந்துள்ளது. பிந்தையது தீவின் செயல் தலைநகரம் மற்றும் அரசாங்கத்தின் பிராந்திய இடமாகும்.
லாவோஸின் முன்னாள் குடியரசுத் தலைவர், கம்தாய் சிபாண்டன், தீவில் ஒரு குடியிருப்பினைக் கொண்டுள்ளார். இது நிலக்கீல் சாலைகள் மற்றும் மின்சாரம் போன்ற அதன் உள்கட்டமைப்பின் உயர் தரத்துடன் விளங்குகிறது. உள்ளூர் வாசிகள் நீண்ட வால் படகுகளில் பயணம் செய்கிறார்கள்.