கோசிறீ தீவுகள் மேம்பாட்டு ஆணையம்

கொச்சி நகரப் பகுதியின் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட இரண்டு அரசு நிறுவனங்களில் இதுவும் ஒன்று

கோசிறீ தீவுகள் மேம்பாட்டு ஆணையம் (Goshree Islands Development Authority) 1994 ஆம் ஆண்டு இந்தியாவின் கேராளாவில் நிறுவப்பட்டது.[1] கொச்சி நகரப் பகுதியின் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட இரண்டு அரசு நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். முழுமையான கொச்சி மாநகராட்சிக்கும் பிராந்தியத்தைச் சுற்றியுள்ள அனைத்து நகராட்சிகளுக்கும் பெருநகர கொச்சின் மேம்பாட்டு ஆணையம் சேவை செய்கிறது. கோசிறீ தீவுகள் மேம்பாட்டு ஆணையத்தின் முக்கிய நோக்கம், இதன் பெயர் குறிப்பிடுவது போல, கொச்சி நகரத்தையும் அதைச் சுற்றிலும் உள்ள சிதறிய தீவுகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது ஆகும். முழு வைப்பீன் தீவு, வல்லர்பாடம், போல்கட்டித் தீவு, கதமக்குடி தீவுகள் மற்றும் 100 கிமீ2 பரப்பளவைக் கொண்ட வேம்பநாடு ஏரியில் உள்ள சிறிய தீவுகளின் குழு ஆகியவை இதன் ப்ரப்பளவாகும்.[2] இப்பரப்பளவு 3.5 லட்சம் மக்கள் தொகை கொண்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Mishra, Sunita (26 January 2021). "All about Goshree Islands Development Authority (GIDA)". Housing.com. Archived from the original on 10 April 2021. பார்க்கப்பட்ட நாள் 10 April 2021.
  2. Areas of Greater Cochin