வல்லர்பாடம்

கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்ட சிற்றூர்

வல்லார்பாடம் (மலையாளம்: വല്ലാർപാടം) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தில், கொச்சியின் ஒரு பகுதியாக விளங்கும் தீவுக் கூட்டங்களில் உள்ள ஒரு தீவாகும். இது வேம்பநாட்டு ஏரியில் அமைந்துள்ளது. இது கொச்சி ஏரி என்றும் அழைக்கபடுகிறது. 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ள இரண்டு தீவுகளில் வல்லர்பாடம் தீவும் ஒன்றாகும், மற்றொன்று வில்லிங்க்டன் தீவு ஆகும் இதைச் சுற்றி கொச்சி துறைமுகம் அமைந்துள்ளது. துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் நிலையம் முழுக்க வல்லார்பாடம் தீவில் அமைந்துள்ளது. வைப்பீன் தீவு இதன் மேற்குப் பக்கத்திலும், முலவுகாட் தீவு இதன் கிழக்கிலும் அமைந்துள்ளன.

வல்லார்பாடம்
தீவு
வல்லார்பாடம் is located in கேரளம்
வல்லார்பாடம்
வல்லார்பாடம்
Location in Kerala, India
வல்லார்பாடம் is located in இந்தியா
வல்லார்பாடம்
வல்லார்பாடம்
வல்லார்பாடம் (இந்தியா)
வல்லார்பாடம் is located in கொச்சி
வல்லார்பாடம்
வல்லார்பாடம்
வல்லார்பாடம் (கொச்சி)
ஆள்கூறுகள்: 9°59′24″N 76°15′18″E / 9.990°N 76.255°E / 9.990; 76.255
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்எறணாகுளம்
அரசு
 • நிர்வாகம்முலுவாக்குடு பஞ்சாயத்து
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
தொலைபேசி குறியீடு0484
வாகனப் பதிவுKL-7
CityKochi
மக்களவை தொகுதிஎறணாகுளம்
குடிமை முகமைமுலுவாக்குடு பஞ்சாயத்து

சாலை போக்குவரத்து தொகு

கோஷ்ரி பாலங்கள் நகர மையம் மற்றும் வைப்பீன் தீவு ஆகியவற்றுடன் வல்லர்பாடம் தீவை இணைக்கின்றன. தனியார் பேருந்துகள், அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள், தானி போன்றவை தீவுக்கும் கொச்சி நகரத்துக்கும் இடையில் இயக்கப்படுகின்றன. நான்கு வழிச் சாலையான தே. நெ என். 47 சி, வல்லர்பாடத்தை தேசிய நெடுஞ்சாலை 47 உடன் கலாமாசேரி சந்தியில் 17.2 கிலோமீட்டர் (10.7 மைல்) தொலைவில் இணைக்கிறது. வல்லர்பாடம் தே. நெ 17 மற்றும் தே. நெ 47 என இரண்டு சாலைகள் வழியாகவும் எளிதில் அணுகக்கூடியது.

தொடருந்து போக்குவரத்து தொகு

2009 முதல், வல்லர்பாடம் இடப்பள்ளி தொடருந்து நிலையத்துடன் 4620 மீட்டர் நீளமுள்ள தொடருந்து பாலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [1] தொர்வண்டிப் பாதை இணைப்பானது பன்னாட்டு சரக்கு பெட்டக கொள்கலன் நிலையத்தில் இருந்து கொள்கலன்களை கொண்டு செல்வதற்காக உருவாக்கபட்டது.

பொருளாதாரம் தொகு

பன்னாட்டு சரக்கு பெட்டக கொள்கலன் நிலையம்
வல்லர்பாடம் தேவாலயம்

தீவின் 70% பகுதி நெல் கழனிகளைக் கொண்டுள்ளது; தீவின் பொருளாதாரமானது முக்கியமாக நெல் சாகுபடியையும், பாரம்பரிய முறைகள் மூலம் உள்நாட்டு மீன்பிடித்தலையும் சார்ந்துள்ளது. குறிப்பாக வலைகட்டு என்று அழைக்கபடும் தனிச்சிறப்பாக பிண்ணப்பட்ட வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்தலானது, தீவாரா எனப்படும் மீனவர் சமூகத்தின் முக்கிய வருவாயாகும்.

காணத்தக்க இடங்கள் தொகு

வல்லர்பாடத்தில் உள்ள புனித அன்னை மரியா பெருங்கோயில் என்பது மாநிலத்தின் ஒரு முக்கிய கத்தோலிக்க யாத்ரீக மையமாகும். ஆதிக்கண்டம் பகவதி கோயில், வல்லர்பாடம் தீவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பகவதி கோயில் ஆகும், இது பனம்புக்காடு என்று அழைக்கப்படுகிறது..

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லர்பாடம்&oldid=3701895" இலிருந்து மீள்விக்கப்பட்டது