கோசி ஆறு

திபெத் (சீனா), நேபாளம் மற்றும் இந்தியாவில் ஓடும் நதி

கோசி ஆறு (Koshi River, நேபாள மொழி: कोशी नदी) நேபாளத்திலும், இந்தியாவின் பீகார் மாநிலத்திலும் ஓடும் ஓர் ஆறு. இது கங்கையின் மிகப்பெரிய துணை ஆறுகளில் ஒன்று. இவ்வாற்றில் 69,300 சதுர கிமீ பரப்பளவு நீர் பாய்கிறது. இந்த ஆற்றிலிருக்கும் வண்டல் காரணமாக அடிக்கடி வழிமாறிப் பாய்வதால் பண்டைக்காலம் தொட்டே வெள்ளங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் ஏற்பட்ட பல பாதிப்புகளால், இவ்வாற்றை பீகாரின் துக்கம் என்று அழைத்தனர். ஆகஸ்ட் 2008ல் கோசி ஆறு 100 ஆண்டுகளுக்கு முன்னர் அமைந்த வழியாக மறுபடி பெருக்கெடுத்தத்தில் வெள்ளம் ஏற்பட்டு 60 மக்கள் உயிரிழந்தனர்; 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். [1]

கோசி (कोसी, कोशी)
சப்த கோசி, सप्तकोसी
River
Bhote Koshi in Nepal during the dry season
நாடுகள் நேபாளம், இந்தியா
மாநிலம் பீகார்
நகரங்கள் பீரத்நகர், பூர்ணியா, கத்திகார்
உற்பத்தியாகும் இடம் Confluence of the Sun Kosi, Arun and Tamur to form Sapta Kosi
 - அமைவிடம் Tribenighat, நேபாளம்
 - ஆள்கூறு 26°54′47″N 87°09′25″E / 26.91306°N 87.15694°E / 26.91306; 87.15694
கழிமுகம் கங்கையாறு
 - அமைவிடம் குர்சேலா அருகில், பீகார், இந்தியா
 - ஆள்கூறு 25°24′43″N 87°15′32″E / 25.41194°N 87.25889°E / 25.41194; 87.25889
நீளம் 729 கிமீ (453 மைல்)
Discharge for கங்கை ஆறு
 - சராசரி

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசி_ஆறு&oldid=3242077" இலிருந்து மீள்விக்கப்பட்டது