கோடைகால வாசிப்பு திட்டம்

கல்வித் திட்டம்

கோடைகால வாசிப்பு திட்டம் (Summer reading program) அமெரிக்காவில் உள்ள 95% பொது நூலகங்களில் நடைபெறுகிறது.[1] குழந்தைகள், பதின்ம வயதினர் மற்றும் பெரியவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்கின்றனர். படிக்கும் ஒவ்வொரு புத்தகம் அல்லது கட்டுரையை விவரிப்பதைத் தவிர, ஒரு செய்திப்பத்திரிகையைப் போல வாசிப்புப் பதிவு பராமரிக்கப்படும் செயல்களில் இவர்கள் பங்கேற்கின்றனர். கோடைகால வாசிப்பு நிகழ்ச்சிகளுக்கான பிற பெயர்களாக விடுமுறைகால வாசிப்பு மன்றம், கோடைகால வாசிப்பு மன்றம், விடுமுறைகால வாசிப்பு திட்டம் மற்றும் கோடைகால நூலக திட்டம் ஆகியவை அறியப்படுகின்றன.[2]

வரலாறு

தொகு

அமெரிக்காவில் உள்ள பொது நூலகங்களில் கோடைகால வாசிப்பு நிகழ்ச்சிகள் 1890 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்படவில்லை.[3] குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் போன்றவர்களை மையமாகக் கொண்டு புத்தகங்களை எவ்வாறு பராமரிப்பது, பதிவுகள் அல்லது பட்டியல்களை எவ்வாறு படிப்பது போன்ற செயல்களை ஆரம்பகால நிகழ்ச்சிகள் இருந்தன. [3] 1929 ஆம் ஆண்டு வாக்கில், கோடைகால வாசிப்பு நிகழ்ச்சிகள் சில நேரங்களில் கருப்பொருள்கள் மையமாக இருந்தன. [3] 1940 ஆம் ஆண்டுகளில் கோடைகாலத்தில் வாசிப்பு இழப்பைத் தடுப்பது கோடைகால வாசிப்புத் திட்டங்களின் குறிக்கோளாக அமைந்திருந்தது. இதற்காக தொழில்முறை வெளியீடுகள் தொடங்கப்பட்டன. [3] 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் உள்ள 95% பொது நூலகங்கள் கோடைகால வாசிப்பு திட்டத்தை வழங்குகின்றன. [1] கோடைகால வாசிப்பு நிகழ்ச்சிகள் கனடாவிலும் பொதுவானவை. [4]

சிறப்பம்சங்கள்

தொகு

மூன்றில் இரண்டு பங்கு பொது நூலகங்கள் கோடைகால வாசிப்பு நிகழ்ச்சியை ஒரு கருப்பொருளுடன் நடத்துகின்றன. [5] பெரும்பாலான கோடைகால வாசிப்பு திட்டங்கள் புத்தகங்கள், கூப்பன்கள் அல்லது புத்தக அடையாளக் குறிகளை பங்கேற்பதற்கான ஊக்கத்தொகையாக வழங்குகின்றன. [5] [6] [7] பங்கேற்பாளர்கள் ஓர் இலக்கை அடையும்போது அந்த ஊக்கங்களைப் பெறுகிறார்கள். [6] நூலகங்கள் பொதுவாக பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை, படிக்க செலவழித்த நேரம் அல்லது படித்த புத்தகங்களின் எண்ணிக்கையை கண்காணிக்கும். [5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Bertot, J.C., Real, B., Lee, J. McDermott, A. J., Jaeger, P.T. (2015). 2014 Digital Inclusion Survey: Survey findings and results. Information Policy and Access Center. https://digitalinclusion.umd.edu/sites/default/files/uploads/2014DigitalInclusionSurveyFinalRelease.pdf பரணிடப்பட்டது 2021-07-05 at the வந்தவழி இயந்திரம்
  2. Fiore, Carole D. (2007). "Summer library reading programs". New Directions for Youth Development 2007 (114): 85–98. doi:10.1002/yd.215. பப்மெட்:17623415. 
  3. 3.0 3.1 3.2 3.3 Bertin, S. (2004). A history of youth summer reading programs in public libraries: A master’s paper for the M.S. in L.S. degree. University of North Carolina at Chapel Hill.
  4. Goss Gilroy Inc. (2006). Literature Review on the Impact of Summer Reading Clubs. Library and Archives Canada, Program Branch. https://tdsrcstaff.cdn.prismic.io/tdsrcstaff%2F218ad805-5aff-49e7-9c66-36667e0bfc10_009003-06-040-e.pdf
  5. 5.0 5.1 5.2 School Library Journal. (2019). Public Library Summer Programming Survey.
  6. 6.0 6.1 Yorio, Kara. "Summer Reading Incentives: Love Them or Hate Them, Prizes Bring Kids In". School Library Journal. பார்க்கப்பட்ட நாள் 2020-02-10.
  7. Barack, Lauren. "Public Library Summer Programming Is Vital to Communities, SLJ Survey Shows". School Library Journal. பார்க்கப்பட்ட நாள் 2020-02-10.