கோட்செஃப் (ஆங்கில மொழி : CodeChef) என்பது உலகெங்கிலும் உள்ள நிரலாளர்களுக்கான போட்டி நிரலாக்க தளமாகும். இந்திய மென்பொருள் நிறுவனமான டைரக்டியின் கல்வி சேவை முயற்சியாக 2009 இல் கோட்செஃப் தொடங்கப்பட்டது.

கோட்செஃப்
வகைஅன்அகாடெமியின் துணை நிறுவனம்
நிறுவுகைசெப்டம்பர், 2009
நிறுவனர்(கள்)பவின் துராகியா
தலைமையகம்பெங்களூரு, இந்தியா
முதன்மை நபர்கள்
தொழில்துறை
மென்பொருள்
தாய் நிறுவனம்அன்அகாடெமி
இணையத்தளம்கோட்செஃப் தளம்

கோட்செஃப் தளத்தில் மாதாந்திர நிரலாக்க போட்டிகள் நடைபெறுகின்றன. மேலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பெண்களிடம் நிரலாக்கத்தை ஊக்கப்படுத்த பல முயற்சிகளை கோட்செஃப் செய்கிறது.[1] கல்லூரி மாணவர்களுக்கான ஐசிபிசி மற்றும் பள்ளி மாணவர்களுக்காக ஐஓஐ ஆகியவையின் இந்தியா பிராந்திய சுற்றை நடத்த கோட்செஃப் தளம் உதவுகின்றது. 2020 ஆம் ஆண்டில், கோட் செஃப்பின் பாதுகாவலர் டைரக்டியில் இருந்து (பவின் துராகியாவால் நிறுவப்பட்டது) அன்அகாடெமி (முன்ஜால், முதன்மை செயல் அலுவலர்) ஆக மாற்றப்பட்டது.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்செஃப்&oldid=3734296" இலிருந்து மீள்விக்கப்பட்டது