கோட்டா அரிநாரயணா

கோட்டா அரிநாரயணா (Kota Harinarayana) என்பவர் ஐதராபாத் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் [1] மற்றும் இந்திய வானூர்தி கழகத்தின் தலைவரும் ஆவார் [2]. இவர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள பெர்காம்பூர் நகரத்தில் 1943 ஆம் ஆண்டு பிறந்தார். தற்போது இந்திய தொழில்நுட்ப நிறுவனம் என்று அழைக்கப்படும் வாரணாசியிலுள்ள பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர் ஆவார் [3]. இங்கு இயந்திரவியலில் இளம் பொறியியலாளர் பட்டமும், இந்திய அறிவியல் நிறுவனத்தில் முதுநிலை வானூர்திப் பொறியியல் பட்டமும், மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். சட்டப்படிப்பில் ஓர் இளம் சட்டவியல் பட்டமும் இவர் பெற்றுள்ளார். தேயாசு எனப்படும் குறைந்த எடை கொண்ட சிறியரக போர் விமானத் திட்டத்தின் இயக்குநராகவும் முதன்மை வடிவமைப்பாளராகவும் பணிபுரிந்தார் [4].

விருதுகள்

தொகு
  • இந்திய இராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் வழங்கும் தனித்துவ அறிவியல் அறிஞர் விருது.[5]
  • 2002 ஆம் ஆண்டு பத்மசிறீ விருது[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "German grant for Hyderabad varsity". The Hindu Business Line. 4 November 2004. http://www.thehindubusinessline.in/2004/11/04/stories/2004110401911700.htm. பார்த்த நாள்: 27 January 2010. 
  2. "Kalam for updating aeronautical policy". தி இந்து. 22 January 2003 இம் மூலத்தில் இருந்து 20 ஜூலை 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090720024241/http://www.hinduonnet.com/2003/01/22/stories/2003012201120800.htm. பார்த்த நாள்: 27 January 2010. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-26. பார்க்கப்பட்ட நாள் 2019-02-13.
  4. "Zephyr 2009 - Celebrating the Spirit of Aviation - Aerospace Engineering, IIT Bombay". aero.iitb.ac.in. Archived from the original on 3 September 2011. பார்க்கப்பட்ட நாள் 30 May 2011.
  5. "`LCA is about creating wealth for country' -- Dr Kota Harinarayana, Programme Director (LCA), Aeronautical Development Agency". The Hindu Business Line. 13 January 2001. http://www.thehindubusinessline.in/2001/01/13/stories/041367ju.htm. பார்த்த நாள்: 27 January 2010. 
  6. "Padma Vibhushan for Rangarajan, Soli Sorabjee". தி இந்து. 26 January 2002 இம் மூலத்தில் இருந்து 21 ஆகஸ்ட் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100821111524/http://www.hinduonnet.com/2002/01/26/stories/2002012605040100.htm. பார்த்த நாள்: 27 January 2010. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டா_அரிநாரயணா&oldid=3586778" இலிருந்து மீள்விக்கப்பட்டது