கோட்டை சாலை உணவுத் தெரு
கோட்டை சாலை உணவுத் தெரு (Fort Road Food Street) என்பது பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப், மாகாணம் லாகூரில் உள்ள இலாகூரின் சுவர்கள் சூழ்ந்த நகரத்தின் கோட்டை சாலை மற்றும் உரோசுனாய் வாயில் இடையே அமைந்துள்ள ஓர் உணவுத் தெரு ஆகும். . லாகூர் உணவு வகைகள் மற்றும் பாட்சாகி பள்ளிவாசல் காட்சிகள் ஆகியவற்றை வழங்குவதற்காகவும் 2012 ஆம் ஆண்டில் இந்த தெரு புனரமைக்கப்பட்டு ஒரு சுற்றுலா தலமாக திறக்கப்பட்டது. [1] [2] 21 ஜனவரி 2012 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆம் தேதியன்று அம்சா சாபாசு செரீபு என்பவரால் கவால்மண்டி உணவுத் தெருவுக்குப் பதிலாக இத்தெரு திறக்கப்பட்டது. [3] [4] 2013 ஆம் ஆண்டில், சுவர்கள் சூழ்ந்த நகரத்தின் லாகூர் ஆணையம் மாவட்ட அரசாங்கத்திடம் இருந்து உணவு வீதியை தன்னுடைய பொறுப்பில் ஏற்றது மற்றும் தனியார் துறையுடன் இணைந்து அதற்கு ஒரு பெரிய முக்கியத்துவத்தைக் கொடுத்தது. [5]
கோட்டை சாலை உணவுத் தெரு Fort Road Food Street | |
---|---|
பராமரிப்பு : | லாகூர் அரசாங்க நகர மாவட்டம் |
துவக்கம்: | கோட்டை சாலை |
முடிவு: | சாகி மொகல்லா தெரு |
கோட்டை சாலை உணவுத் தெரு முகலாய கால பாட்சாகி பள்ளிவாசல் காட்சிகளுடனான பாரம்பரிய இலாகூர் உணவு வகைகளுக்கு பெயர் பெற்றதாகும். [6] தெருவை அடிப்படையாகக் கொண்ட கட்டிடம் முகலாய பேரரசு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. [7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lahori food in a surreal setting — Fort Road Food Street". பார்க்கப்பட்ட நாள் 2016-06-21.
- ↑ "What is Lahore with a food street!". http://www.pakistantoday.com.pk/2011/11/20/city/lahore/what-is-lahore-with-a-food-street/.
- ↑ "Inauguration of Food Street". http://www.pakistantoday.com.pk/2012/01/fort-road-food-street-opens-today/.
- ↑ "New Food Street opened in Lahore". http://www.thenews.com.pk/TodaysPrintDetail.aspx?ID=88664&Cat=5.
- ↑ "Newlook street | Shehr | thenews.com.pk". பார்க்கப்பட்ட நாள் 2021-04-07.
- ↑ "Lahori food in a surreal setting — Fort Road Food Street | Pakistan Today". Archived from the original on 2022-01-20. பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
- ↑ "Fort Road Food Street of Lahore- An architectural Marvel from Pakistan -". பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
புற இணைப்புகள்
தொகு- "Ramazan offerings: Low turnout of customers at Fort Road Food Street". The Express Tribune. 24 July 2012.
- "Plans: Punjabi music at Food Street soon". Express Tribune. 6 October 2012.