கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல்

கோட்டை மாரியம்மன் கோயில், தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகரில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலாகும்.

நுழைவாயில்

மூலவர் தொகு

இக்கோயிலின் மூலவராக மாரியம்மன் உள்ளார். அம்மன் சன்னதியையொட்டி முன்புறம் விநாயகர் சன்னதி, வலது புறம் மதுரை வீரன் சன்னதி, முன்புறம் வடக்கில் நவக்கிரக சன்னதி, தென்புறம் முனீஸ்வரர் சன்னதி, வட புறம் கருப்பண்ணசாமி சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. [1] திண்டுக்கல் பகுதிவாழ் மக்களின் இஷ்ட தெய்வம் என பல்வேறு பெருமைகள் வாய்ந்த கோயிலாக இக்கோயில் உள்ளது.[2]

வாயில்கள் தொகு

இக்கோயிலுக்கு மூன்று வாயில்கள் உள்ளன. ஊர்வலக் காலங்களில் அம்மன் முன் வாயில் வழியாக செல்வது வழக்கமாக உள்ளது. பின்புற வாயில்கள் மலைக்கோட்டையை ஒட்டி அமைந்துள்ளது. [1]

விழா தொகு

ஆண்டுதோறும் மாசி மாதத்தில் 20 நாட்கள் விழா சிறப்பாக நடைபெறுகிறது. [1]

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு