கோட்லி மாவட்டம்

கோட்லி மாவட்டம் (Kotli District), பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஆசாத் காஷ்மீர் பகுதியின் 10 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் கோட்லி நகரம் ஆகும்.[2] 1,862 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2017 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 7,74,194 ஆகும். இதன் அலுவல் மொழி உருது மொழியாக இருப்பினும், பெரும்பாலான மக்கள் பகாரி மொழி, காஷ்மீரி மொழி மற்றும் குர்ஜரி மொழிகளை பேசுகின்றனர்.[3][4]

கோட்லி மாவட்டம்
ضلع کوٹلی
மாவட்டம்
பாகிஸ்தான் நாட்டின் ஆசாத் காஷ்மீர் பகுதியில் கோட்லி மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் நாட்டின் ஆசாத் காஷ்மீர் பகுதியில் கோட்லி மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
நாடுபாகிஸ்தான்
பிரதேசம்ஆசாத் காஷ்மீர்
வருவாய் கோட்டம்மிர்பூர்
தலைமையிடம்கோட்லி
அரசு
 • வகைDistrict Administration
பரப்பளவு
 • மொத்தம்1,862 km2 (719 sq mi)
மக்கள்தொகை (2017)
 • மொத்தம்774,194[1]
 • அடர்த்தி416/km2 (1,080/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஉருது
 • பேச்சு மொழிகள்பகாரி மொழி, காஷ்மீரி மொழி, குர்ஜரி மொழி
தாலுகாக்கள்5

அமைவிடம் தொகு

கோட்லி மாவட்டத்தின் வடக்கில் பூஞ்ச் மாவட்டமும், வடகிழக்கில் இந்தியாவின் பூஞ்ச் மாவட்டமும், தெற்கில் மிர்பூர் மாவட்டம் மற்றும் பீம்பெர் மாவட்டம், மேற்கில் ராவல்பிண்டி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம் தொகு

கோட்லி மாவட்டம் 5 தாலுகாக்களை கொண்டது. அவைகள்:[5]

  • சார்ஹோய் தாலுகா
  • பாதேபூர் தாலுகா
  • குய்ரட்டா தாலுகா
  • கோட்லி தாலுகா
  • சென்சா தாலுகா

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்லி_மாவட்டம்&oldid=3606761" இருந்து மீள்விக்கப்பட்டது