கோதண்டராமர் திருக்கோயில், பூதிமுட்லு
கோதண்டராமர் திருக்கோயில் என்பது தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகில் உள்ள பூதிமுட்லு என்னும் கிராமத்தில் அமைந்துள்ள இராமர் கோயிலாகும். இது 16ம் நூற்றாண்டினை சேர்ந்த கோயிலாகும்.
கோதண்டராமர் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கிருஷ்ணகிரி |
அமைவிடம்: | பூதிமுட்லு |
சட்டமன்றத் தொகுதி: | வேப்பனபள்ளி |
மக்களவைத் தொகுதி: | கிருஷ்ணகிரி |
கோயில் தகவல் | |
மூலவர்: | கோதண்டராமர் |
தாயார்: | சீதை தேவி |
சிறப்புத் திருவிழாக்கள்: | ராம நவமி |
வரலாறு
தொகுஇக்கோயிலில் உள்ள மூலவர் சிலையானது கெலமங்கலம் ரத்தினகிரி கோட்டையில், பராமரிப்பின்றி கிடந்த கோயிலில் இருந்து கொண்டுவந்து நிறுவப்பட்டு கோயில் எழுப்பப்பட்டது என்று தெரிகிறது. இது சுமார் 16 ஆம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வு என்றும் கூறப்படுகிறது.[1]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலின் வாயிலானது வடதிசை நோக்கி அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு எதிரில் உள்ள தீர்த்தகுளமானது அழகிய கட்டமைப்புடன் சிறப்பாக அமைந்துள்ளது. கோயில் பிரகாரத்தில் மடப்பள்ளியும், மண்டபங்களும் அமைந்துள்ளன. கருவறையில் வில்லேந்திதிய கோதண்டராமர், சீதை, இலக்குவனுடன் அழகுற காட்சியளிக்கின்றனர்.[2] இக்கோயிலின் தேரானது கற்சக்கரத்த்தால் பூட்டப்பட்டு மார்ச் மாத பௌர்ணமி நாளில் தேர்திருவிழா நடக்கிறது.
விழாக்கள்
தொகுஇக்கோயிலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. குறிப்பாக புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மிகச்சிறப்பாக வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாசிமாதம் பௌர்ணமியன்று ஆண்டு விழாவாக தேர்த் திருவிழா நடத்தப்படுகிறது.[3] இதையோட்டி ஒன்பது நாட்கள் விழா நடத்தப்படுகிறது.
அமைவிடம்
தொகுகிருஷ்ணகிரி நகரில் இருந்து பேரிகை செல்லும் சாலையில் 40 கிலோமீட்டர் தொலைவில் வேப்பனப்பள்ளி உள்ளது. வேப்பனப்பள்ளியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, சாலையை ஒட்டியவாறு கோயிலின் தோரணவாயில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "வேப்பனஹள்ளியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமர் கோயில்". செய்திக் கட்டுரை. தினகரன். 28 ஏப்ரல் 2015. Archived from the original on 2015-05-09. பார்க்கப்பட்ட நாள் 11 சூலை 2018.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. pp. 132–133.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ "வேப்பனஅல்லி ஸ்ரீகோதண்டராமர் கோயில் தேர்த் திருவிழா". செய்தி. தினமணி. 3 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 சூலை 2018.
{{cite web}}
: Check date values in:|date=
(help)