கோத்ரி பாலம்
கோத்ரி பாலம் (Kotri Bridge) பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள சிந்து ஆற்றின் மீது கோத்ரி மற்றும் ஐதராபாத்து நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள ஒரு சாலை-இரயில் பாலமாகும். 1900 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதியன்று போக்குவரத்துக்காக இப்பாலம் திறக்கப்பட்டது. 1931 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டது. கோத்ரி பாலம் ஐந்து கண் இடைவெளிகள் கொண்டு நீண்டுள்ளது. பாலத்தின் மொத்த நீளம் 1,948 அடிகளாகும்.(594 மீ)[1]
பாலத்தில் ஒற்றை இரயில் பாதையும் அந்த இரயில் பாதையின் இருபுறமும் சாலைகளும் உள்ளன. 1980 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் பழைய பாலத்திற்கு அருகிலேயே இரயில் போக்குவரத்திற்காக மற்றொரு இரயில் பாலம் கட்டப்பட்டது. இப்புதிய பாலம் மெக்ரான் இரயில்வே பாலம் என்று அழைக்கப்படுகிறது. கோத்ரி பாலம் இன்றும் கூட ஒரு வழி இரயில் பாதையாகவும், இரு வழி சாலை போக்குவரத்து பாதையாகவும் பயன்பாட்டில் உள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Bridge over Indus at Kotri (1900) பரணிடப்பட்டது 2012-03-14 at the வந்தவழி இயந்திரம். Publisher: The Friday Times, Published: 09-15 March 2012, Retrieved on 3 July 2013
- ↑ Another bridge in danger, Publisher: PakTribune. Published: 15 November 2006, Retrieved on 3 July 2013