கோந்தாலி

இந்தியாவின் மகாராட்டிராவில் உள்ள சமூகம்

கோந்தாலி (Gondhali) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள ஓர் இந்து சமூகமாகும். . மகாராட்டிர தெய்வங்களின் பாடல்களைப் பாடுவது இவர்களின் தொழிலாகும். பாடல்களில் பொதுவாக இவர்கள் கடவுள்களின் புராணக் கதைகள் இடம் பெறுகின்றன. கடவுளுக்கு முன்பாகப் பாடுவதும் நடனமாடுவதும் கோந்தல் என்றும், கோந்தலை நிகழ்த்தும் சமூகம் கோந்தாலி என்றும் அழைக்கப்படுகிறது.[1] மனித ஆன்மாவை அனைத்து ஊழல் மற்றும் அநீதியிலிருந்தும் விடுவிப்பதற்காக, தெய்வீக சக்தியை பூமியில் இறங்க அனுமதிப்பதே கோந்தலின் நோக்கமாகும். இவர்கள் தங்கள் பாடல்களுக்கு தாளத்தைக் கொண்டு வர கழுத்தில் கட்டப்பட்ட மேளத் தொகுப்பைப் பயன்படுத்துகிறார்கள்.[2]

சம்பல் கலைஞர்

இந்தியாவில் சுமார் 58,000 கோந்தல்கள் வாழ்கின்றனர். தெற்காசிய இந்துக்களின் ஒரு பகுதியாகக் கருதப்படும் இந்த மக்கள் குழு இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது. இவர்களின் முதன்மை மொழி மராத்தியாகும். கோந்தாலிகளால் பின்பற்றப்படும் முதன்மை மதம் இந்து மதம் என்றும் இந்திய துணைக்கண்டத்தின் முக்கிய மத பாரம்பரியம் கொண்ட இனம் என்றும் கருதப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு, கோந்தாலிகள் மிகவும் மரியாதைக்குரிய குழுவாக இருந்தனர், அவர்களை ஆட்சியாளர்களே தங்கள் செயல்பாடுகளுக்கு அழைத்தனர். அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றி அறிந்தவர்கள் மற்றும் பெரும்பாலும் சமூக அக்கறைகள் பற்றிய பாடல்களை இயற்றினர். பெரியவர்களை மதிக்க வேண்டும், ஒவ்வொருவரும் தன் குடும்ப நலனுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்பது போன்ற சமூக செய்திகளை இவர்களின் பாடல்கள் பரப்புகின்றன.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோந்தாலி&oldid=3805310" இலிருந்து மீள்விக்கப்பட்டது