கோன்னீ வாக்கர்

கோன்னீ வாக்கர் Connie Walker (பிறப்பு:1957) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் தேசிய ஒளியியல் வான்காணகத்தின் முதுநிலைப் பணியாளராக உள்ளார்.[1] இவர் தேசிய ஒளியியல் வான்காணக ஆராய்ச்சி சார்ந்த அறிவியல் கல்வித் துறையில் பணிபுரிகிறார். அங்கே இவர் சிறுவருக்கான வானியல்பயிற்ருவிப்பதற்கான பாட்த்திட்ட்த்தை ஆசிரியர்கள் உருவாக்க உதவிவருகிறார். இவர் இரவுப் பூவுலகம் திட்டத்துக்கும்[2] இவர் வான் திட்டத்திற்கும் (Project Astro) இயக்குநராக உள்ளார். மேலும், இவர் பன்னாட்டு இருண்டவானக் கழகத்திலும் பசிபிக் வானியல் கழகத்திலும் இயக்குநர் குழும உறுப்பினராகவும் உள்ளார்.[3] இவர் பன்னாட்டு வானியல் ஆண்டின் இருண்ட வான விழிப்புணர்வுத் திட்டத்தின் தலைவராவார்.[4] இவர் பூவுலக வானியல் மாத இருண்ட வான விழிப்புணர்வு திட்டத்துக்குத் தொடர்ந்து தலைமை தாங்கி வருகிறார். இவர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் ஆணையம் 50 இன் தலைமைப் பொறுப்பில் உள்ளார்.

இவர் வானியல், ஒளி மாசு பற்றிய பரப்பலிலும் கல்வியிலும் முனைவாகச் செயல்பட்டு வருகிறார். இவர் 2001 இல் இருந்து தேசிய ஒளியியல் வான்காணகத்தில் பணிபுரிகிறார்.

29292 கோன்னீ வாக்கர் எனும் சிறுகோள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Connie Walker: Associate Scientist; Senior Science Education Specialist". National Optical Astronomy Observatory. Archived from the original on 2017-08-07. பார்க்கப்பட்ட நாள் 2009-12-03.
  2. "Connie Walker". National Optical Astronomy Observatory. Archived from the original on 7 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 28 February 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "IDA 2014 Board of Directors". International Dark Sky Association. பார்க்கப்பட்ட நாள் 28 February 2014.
  4. "TAEM interview with Dr. Constance Walker of the National Optical Astronomy Observatory in Tucson". The Arts and Entertainment Magazine. March 2014 இம் மூலத்தில் இருந்து 5 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140305085430/http://www.eeriedigest.com/wordpress/2013/04/taem-interview-with-dr-constance-walker-of-the-national-optical-astronomy-observatory-in-tucson/. பார்த்த நாள்: 28 February 2014. 
  5. Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (29292) Conniewalker [2.35, 0.20, 25.6]. Springer Berlin Heidelberg. p. 194. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 18 January 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோன்னீ_வாக்கர்&oldid=3575190" இலிருந்து மீள்விக்கப்பட்டது