கோபத்ம விரதம்

ஆனி அமாவாசையை அடுத்து வருகின்ற ஏகாதசி கோபத்ம விரதம் இருக்கின்ற நாளாகும். [1] இந்த விரதம் ஆனி அமாவாசையில் தொடங்கி ஆஷாட பூர்ணிமாவில் முடிகிறது. அதாவது ஆஷாடா மாத அமாவாசையில் தொடங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது. இந்நாட்களில் விரதம் இருந்து பசுக்களுக்கு பூசை செய்தல் சிறப்பாகும்.

ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசியன்று கடைப்பிடிக்கும் விரதத்தினையும் கோபத்ம விரதம் என்று கூறுகின்றனர். [2]

இந்து சமயத்தில் பசுக்கள்

தொகு

பாற்கடல் கடையும் நிகழ்வின் போது அமிதர்த்தோடு எண்ணற்ற பொருட்கள், உயிர்கள் கிடைத்தன. அவற்றில் காமதேனு எனும் பசுவும் ஒன்று. அந்தப்பசு கேட்டதை தருகின்ற ஆற்றல் பெற்றதாகும். காமதேனுவுக்கு பட்டி, விமலி, சயனி, நந்தினி, கொண்டி என்ற ஐந்து குட்டிகள் பிறந்தன.

சிவபுராணத்தில் சிவபெருமான் நான்கு பசுக்களையும் நான்கு திசை தெய்வங்களுக்கு அளித்தார் என்று கூறப்படுகிறது. இந்திரனுக்கு சுசிலை என்ற பசுவையும், எமனுக்கு கபிலை என்ற பசுவையும், வருணனுக்கு ரோகிணி என்ற பசுவையும், குபேரனுக்கு காமதேனு பசுவையும் சிவபெருமான் அளித்துள்ளார்.‌

தொன்மம்

தொகு

இந்த விரதத்தினை கிருஷ்ணர் தனது சகோதரி சுபத்ரா தேவிக்கு பரிந்துரைத்தார்.

விரத முறை

தொகு

பூஜை அறையிலோ அல்லது துளசி செடிக்கு அருகாமையிலோ அல்லது புறவாசலில் உள்ள துளசி தொட்டிக்கு அருகாமையிலோ கோ பத்ம ஓவியத்தை வரைகிறார்கள்.

ஆதாரங்கள்

தொகு
  1. தினமலர் பக்திமலர் 23.07.2015 பக்கம் 3
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-19. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபத்ம_விரதம்&oldid=3732383" இலிருந்து மீள்விக்கப்பட்டது