கோபாலசாமி சேனைகொண்டார்

கோபாலசாமி சேனைகொண்டார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவர் தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி பகுதி மூர்க விநாயகர் கோயில் தெருவில் 1901 ஆம் ஆண்டு கள்ளர் மரபில் ராமசாமி சேனைகொண்டார் மகனாக பிறந்தார்.

இந்திய விடுதலைப் போராட்டம்

தொகு

இவர் எழுத்தறிவு பெற்றவர், 1932 ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார், 1932 இல் வரி இல்லா இயக்கம், தனிநபர் சத்தியாகிரகம் மற்றும் 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கம் பங்கேற்றார், ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு 1932 இல் ஆறு மாதங்கள் மற்றும் 1943 இல் 14 மாதங்கள் சிறைத்தண்டனை தண்டனை விதிக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் மற்றும் அலிபுரம் சிறைகளில் அடைக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Who S Who Of Freedom Fighters Vol 2. GOVERNMENT OF TAMIL NADU.
  2. சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு அஞ்சலி. dinamani.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபாலசாமி_சேனைகொண்டார்&oldid=4170135" இலிருந்து மீள்விக்கப்பட்டது