கோபால்ட்-60

கோபால்ட் தனிமத்தின் கதிரியக்க ஓரிடத்தான்

கோபால்ட்டு-60 (Cobalt-60, 60
Co
), என்பது கோபால்ட்டின் செயற்கைக் கதிரியக்கத் தன்மையுள்ள ஓரிடத்தான் ஆகும். இதன் அரைவாழ்வுக் காலம் 5.27 ஆண்டுகள். இது மருத்துவம், தொழில்துறை, உணவு பாதுகாப்பு, ஆய்வு எனப் பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிக ஆற்றலுள்ள γ கதிர்களை வெளியிடும் கதிர் ஐசோடோப்புகளில் இதுவும் ஒன்று. வெப்ப நியூத்திரன்களைக் கொண்டு 27Co59 தாக்கும் போது 27Co60 கிடைக்கிறது. இயற்கையில் கிடைக்கும் கோபால்ட் 100% கதிரியக்கம் இல்லாததாகவேயள்ளது. கோபால்ட்-60 தோற்றுவிக்கப்படும் போது வெளிப்படும் அதிக ஆற்றல், ஒரு போட்டானாக வெளிப்படுகிறது.

கோபால்ட்-60, 60Co
பொது
குறியீடு60Co
பெயர்கள்கோபால்ட்-60, Co-60
நேர்மின்னிகள் (Z)27
நொதுமிகள் (N)33
நியூக்லைடு தரவு
இயற்கையில்
கிடைக்குமளவு
trace
அரைவாழ்வுக் காலம் (t1/2)1925.20 நா
ஓரிடத்தான் நிறை59.9338222 Da
சுழற்சி5+
Decay modes
சிதைவு முறைசிதைவு ஆற்றல் (MeV)
β-, γ2.824 [1]
Isotopes of கோபால்ட்டு
நியூக்லைடுகளின் முழுமையான அட்டவணை
கோபால்ட்-60 இன் காமா-கதிர் நிறமாலை

இது, 27Co59 +n --> 27Co60 +γ என்று குறிக்கப்படும். (n,γ) கருவினையின் போது தோன்றும் 27Co60 கிளர்ந்த நிலையிலேயே உள்ளது. இந்த கோபால்ட் 60, 0.059 MeV காமா குவாண்டத்தினை வெளியேற்றி, குறைந்த ஆற்றல் கொண்ட நிலைக்கு திரும்புகிறது. இது ஒரு ஐசோமெரிக் மாற்றம் இது நிகழ 10.5 நிமிடங்கள் வைப்படும் இதுவே அதன் அரை வாழ்வு ஆகும்.

இவ்வாறு பெறப்பட்ட கோபால்ட் 60 நிலையில்லாதது. இது ஒரு பீட்டத் துகளை வெளியிட்டு -இந்த பீட்டாத் துகளின் ஆற்றல் 0.3 MeV - ஒரு நிக்கல்28Ni60 ஐசோடோப்பாக மாறுகிறது. இதனை,

27Co6028Ni60 + γ1 +γ2

இந்த இரு காமா குவாண்டம்களும் முறையே 1.17,1.33 MeV ஆற்றலுள்ளவையாகும். இந்த நிக்கல் ஐசோடோப்பும் கிளர்ந்த நிலையிலேயே உள்ளது. அதிக பிழையின்றி கோபால்ட் 60 ,1.25 MeV ஆற்றலுள்ள ஒரு காமா கதிரினை உமிழ்வதாகக் கொள்ளலாம். கோபால்டின் அரைவாழ்வுநேரம் 5.24 ஆண்டுகளாகும்.

கோபால்ட் 60 , 2.13 MeV ஆற்றலுள்ள ஒரு காமாக் கதிரையும் வெளியிடுவதாக புத்தகங்களில் உள்ளன. ஆனால் இது 0.001% ஆகும். எனவே இது பொதுவாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. Korea Atomic Energy Research Institute. "Nuclide Table". பார்க்கப்பட்ட நாள் 2009-03-14.
  2. National Institute of Standards and Technology. "Radionuclide Half-Life Measurements". Archived from the original on 2016-08-12. பார்க்கப்பட்ட நாள் 2011-11-07.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்ட்-60&oldid=3774740" இலிருந்து மீள்விக்கப்பட்டது