கோபால் சிங் (அரசியல்வாதி)

இந்திய எழுத்தாளர், அரசியல்வாதி

முனைவர் கோபால் சிங் (Gopal Singh)(1917-1990) அரசியல்வாதியும், மாயவாதியும், கவிஞரும், எழுத்தாளரும் தத்துவவாதியுமாவார். இவர் கோவா ஆளுநராகவும் நாட்டின் சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் தலைவராகவுமிருந்தார்.[1]

கோபால் சிங்
நாகாலாந்து ஆளுநர்
பதவியில்
20 ஜூலை 1989 – 3 மே 1990
பின்னவர்எம். எம். தாமஸ்
கோவா ஆளுநர்
பதவியில்
30 மே 1987 – 17 ஜூலை 1989
பின்னவர்குர்சித் ஆலம் கான்
கோவா துணைநிலை ஆளுநர்
பதவியில்
24 செப்டம்பர் 1984 – 29 மே 1987
முன்னையவர்இத்ரிஸ் அசன் லத்திப்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 நவம்பர் 1917
இறப்பு8 ஆகஸ்ட் 1990
தேசியம்இந்தியர்
துணைவர்சிறீமதி இந்திரஜீத் கௌர்

கோவாவின் துணை நிலை ஆளுநராக இருந்த இவர், மே 1987 முதல் கோவா மாநிலத்தின் ஆளுநராகவும், நாகாலாந்தின் ஆளுநராகவும் இருந்தார்.[2] 3 ஏப்ரல் 1962 முதல் 2 ஏப்ரல் 1968 வரை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

ஓர் எழுத்தாளரான இவர், சீக்கிய வேதமான கிரந்த சாஹிப்பை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஆங்கில-பஞ்சாபி அகராதி, குரு நானக், குரு கோவிந்த் சிங் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றாசிரியரும் ஆவார். [3]

மேற்கோள்கள் தொகு

  1. Bawa, Paramjit Singh (2005). Mahalla nawan: compositions of Guru Tegh Bahādur-the ninth guru. Allied Publishers. பக். 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7764-897-7. https://books.google.com/books?id=8vT-Xs38qtcC&q=Gopal+Singh&pg=PA78. 
  2. "Dr. Gopal Singh". Raj Bhavan, Kohima, Nagaland. பார்க்கப்பட்ட நாள் 6 May 2019.
  3. "Previous members of Rajya Sabha: Letter S" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 6 May 2019.