கோபெல்லைட்டு

சல்போவுப்புக் கனிமம்

கோபெல்லைட்டு (Kobellite) என்பது Pb22Cu4(Bi,Sb)30S69 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.சாம்பல் நிறத்துடன் இழைமத் தன்மை கொண்ட ஓர் உலோகக் கனிமமாக இது காணப்படுகிறது. ஆண்டிமனி, பிசுமத், ஈயம் போன்ற தனிமங்களுடன் சேர்ந்த ஒரு சல்பைடு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. ஐசோகிளாகெயிட்டு-பெர்ரியைட்டு தொடரில் கோபெல்லைட்டும் ஒரு உறுப்பினராகும். மேற்கண்ட தொடர் வரிசை அமைப்பின் தாமிரத்தளத்தில் வெள்ளியும் இரும்பும் பதிலிடப்பட்டு, பிசுமத், ஆண்டிமனி மற்றும் ஈயம் தனிமங்களின் விகிதம் மாறுபடுகிறது. ஒற்றைச்சரிவச்சு கூர்நுனிகோபுர வடிவ படிகங்களாக இக்கனிமம் படிகமாகிறது. சுவீடனிலுள்ள இவெனா, கொலராடோவிலுள்ள அவுரே, அமெரிக்காவின் வடக்கு கரோலினாவிலுள்ள வேக் மாகாணம் போன்ற இடங்களில் உள்ள தாதுப் படிவுகளில் கோபெல்லைட்டு காணப்படுகிறது. 1803 முதல் 1882 வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்த செருமனியின் உல்ப்கேங் பிரான்சு வோன் கோபெல் என்பவர் கண்டறிந்த காரணத்தால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

கோபெல்லைட்டு
Kobellite
பொதுவானாவை
வகைசல்பைடு
வேதி வாய்பாடுPb22Cu4(Bi,Sb)30S69
இனங்காணல்
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
மேற்கோள்கள்[1][2][3]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் கோபெல்லைட்டு கனிமத்தை Kbl[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. [1]
  2. Mindat.org
  3. Webmineral.com
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபெல்லைட்டு&oldid=4091947" இலிருந்து மீள்விக்கப்பட்டது