பலானை கண்ணகை அம்மன் கோவில்

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஓர் அம்மன் கோயில்
(கோப்பாய் பலானை கண்ணகை அம்மன் தேவஸ்தானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பலானை கண்ணகை அம்மன் கோவில் யாழ்ப்பாணம், கோப்பாயில், பலானை என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

கோப்பாய் பலானை கண்ணகை அம்மன் கோவில்
கோப்பாய் பலானை கண்ணகை அம்மன் கோவில் is located in இலங்கை
கோப்பாய் பலானை கண்ணகை அம்மன் கோவில்
கோப்பாய் பலானை கண்ணகை அம்மன் கோவில்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்:9°41′0″N 80°03′0″E / 9.68333°N 80.05000°E / 9.68333; 80.05000
பெயர்
பெயர்:பலானை கண்ணகை அம்மன் தேவஸ்தானம்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:வடக்கு
மாவட்டம்:யாழ்ப்பாணம்
கோயில் தகவல்கள்
மூலவர்:கண்ணகை அம்மன்
இணையதளம்:கோப்பாய் பலானை கண்ணகை அம்மன்

இக்கோயிலின் உள்வீதியில் காணப்படும் 25 அடி சுற்றளவுள்ள கூழாவடி மரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.[1] முன்னர் இக்கூழா ம‌ர‌த்தின் கீழ் க‌ண்ண‌கி விக்கிர‌க‌ம் வைத்து பூசைக‌ள் ந‌ட‌ந்திருக்க‌லாம். இன்றும் கூழா ம‌ர‌த்த‌டியில் மூல‌ஸ்தான‌ பூசைக்கு முன்பு சிறப்பு பூசைக‌ள் ந‌டைபெறுகின்ற‌ன‌.[2]

இக்கோயிலில் பங்குனி மாத‌த் திங்க‌ட்கிழ‌மைக‌ளில் பொங்க‌ல் செய்து வ‌ழிபாடு ந‌டைபெறுகிறது. 1973 ஆம் ஆண்டு வ‌ரை இக்கோவிலில் கொடியேற்ற‌த்துடன் கூடிய‌ மகோற்ச‌வ‌ம் 25 நாட்க‌ள் வ‌ரை ந‌டைபெற்ற‌து. பின்ன‌ர் ஆல‌ய‌ குருக்க‌ளுக்கும் பொதும‌க்க‌ளுக்கும் இடையில் ஏற்ப‌ட்ட‌ க‌ருத்து வேறுபாடுக‌ளால் இவ்வால‌ய‌ம் 1974-1983 வ‌ரை மூட‌ப்ப‌ட்டிருந்த‌து. பின்பு நீதிம‌ன்ற‌த்தின் தீர்ப்பிற்க‌மைய‌ ஆல‌ய‌ம் திற‌க்க‌ப்ப‌ட்டு, 1986 இல் குடமுழுக்கு ந‌டைபெற்ற‌து.[2]

த‌ற்போது ஆடி மாத‌த்தில் 10 நாட்களுக்கு அல‌ங்கார‌ உற்ச‌வ‌ங்க‌ள் ம‌ட்டும் ந‌டைபெறுகின்ற‌ன‌.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "பலானை கண்ணகை அம்மன் ஆலயம்". Archived from the original on 2015-04-05. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25.
  2. 2.0 2.1 2.2 "கண்னகை அம்மன்". Archived from the original on 2014-07-08. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25.