கோப்பாய்

இலங்கையில் உள்ள இடம்

கோப்பாய் (Kopay) யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமப் பிரிவில் உள்ள கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊராகும். இது கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் தலைமை இடமாகவும் உள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாண நகரில் இருந்து சுமார் 4 மைல்கள் தொலைவில் இவ்வூர் உள்ளது. இவ்வூரின் வடக்கு எல்லையில் நீர்வேலியும், மேற்கு எல்லையில் உரும்பிராயும், தெற்கு எல்லையில் இருபாலையும் உள்ளன. கடலேரி கிழக்கு எல்லையாக அமைந்துள்ளது. மானிப்பாயில் இருந்து தென்மராட்சியில் உள்ள கைதடி என்னும் ஊருக்குக் இவ்வூரினூடாகச் செல்லும் வீதி பருத்தித்துறை வீதியை வெட்டிச் செல்லும் இடம் கோப்பாய்ச் சந்தி என அழைக்கப்படுகின்றது. கோப்பாயின் வணிகப் பகுதி இச் சந்தியை அண்டியே காணப்படுகின்றது.

கோப்பாய்
Kopay
நகரம்
கோப்பாயில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம்
கோப்பாயில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம்
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பி.செ. பிரிவுவலிகாமம் கிழக்கு

ஆலயங்கள்தொகு

கல்விதொகு

  • கோப்பாயில் ஆறுமுக நாவலரால் நிறுவப்பட்ட பழைமையான "கோப்பாய் தமிழ் கலவன் பாடசாலை" உள்ளது. இது பொதுவாக அவ்வூர் மக்களால் நாவலர் பாடசாலை என்றே அழைக்கப்படுகிறது.
  • கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி,
  • சரவணபவானந்தா வித்தியாலயம் என்பவை ஏனைய பிரபல பாடசாலைகள்.

அறிஞர் பெருமக்கள்தொகு

தொல் பெருமைதொகு

யாழ்ப்பாண அரசுக் காலத் தலைநகரமான நல்லூருக்கு சிறு தொலைவில் உள்ள இவ்வூரில், யாழ்ப்பாண மன்னர் கோட்டையொன்றை அமைத்திருந்தனர்.

இவற்றையும் பார்க்கவும்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோப்பாய்&oldid=3242245" இருந்து மீள்விக்கப்பட்டது