மாவீரர் துயிலும் இல்லம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் போன்றவற்றை உள்ளடக்கிய நிலப்பரப்பு, மாவீரர் துயிலுமில்லம் எனப்படும். இவற்றுள் 62 சதவீதமானவை விடுதலைப்புலிகளின் நிர்வாகம் இருந்த பகுதிகளிலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 விழுக்காடும், மட்டு - அம்பாறையில் 18 விழுக்காடும், வவுனியா, திருகோணமலை மாவட்டங்களில் 4 விழுக்காடும் உள்ளன. மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தினமான நவம்பர் 27ஆம் திகதியன்று மாவீரர்களின் பெற்றோர் நினைவுக்கற்களுக்கும், கல்லறைகளிற்கும் ஈகைச்சுடர் ஏற்றுவர். அதே வேளை அங்கமைந்திருக்கும் பொதுச் சுடரினை தளபதிகள் ஏற்றி வந்தனர். நவம்பர் 27 மாலை 6.05 மணிக்கு வணக்கத் தலங்களிலும் மணியொலி எழுப்பப்பட்டு, சுடர் ஏற்றப்படும். இயக்கத் தளபதிகள் பொதுச்சுடர் ஏற்றி வந்தனர். அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர் ஈகைச்சுடர் ஏற்றுவர். 2009 இல் விடுதலைப் புலிகள் போரில் தோற்ற பின்பு இந்த மாவீரர் துயிலும் இல்லங்களில் பெரும்பாலானவை இலங்கை படைத்துறையால் அழித்தொழிக்கப்பட்டன.
மாவட்டந்தோறும் அமையப்பெற்றிருக்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள்
தொகு- கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லம்.
- தரவை மாவீரர் துயிலுமில்லம்.
- தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்.
- கண்டலடி மாவீரர் துயிலுமில்லம்.
- மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம்.
- ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
- தியாகவனம் மாவீரர் துயிலுமில்லம்.
- பெரியகுளம் மாவீரர் துயிலுமில்லம்.
- உப்பாறு மாவீரர் துயிலுமில்லம்.
- ஜீவன்முகாம்/ உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம்.
- கோடாலிக்கல் மாவீரர் துயிலுமில்லம்.
- ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
- ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம்.
- பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்.
- முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
- முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்.
- விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லம்.
- அளம்பில் மாவீரர் துயிலுமில்லம்.
- ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
- வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
- கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்.
- முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம்.