கோமதி மாரிமுத்து

தடகள வீராங்கனை

கோமதி மாரிமுத்து (Gomathi Marimuthu) தமிழகத்தை சார்ந்த இந்திய தடகள வீராங்கனை ஆவார். இவர் கத்தார் நாட்டின் தோகாவில் நடைபெற்ற 23ஆவது ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் 800 மீட்டர் தொலைவை 2.02.70 நிமிடங்களில் கடந்தார். இவரின் வயது 30 ஆகும். இவர் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் முடிகண்டம் பகுதியைச் சார்ந்தவர் ஆவார்.[1][2] இவர் இளங்கலை வணிகவியல் பட்டதாரி ஆவார்.[3] இவர் பெங்களூருவில் வருமான வரித்துறையில் பணிபுரிந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு புனேவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் ஏழாவது இடத்தையும், 2015 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் 4 ஆவது இடத்தையும் பிடித்திருந்தார்.[4]

தனிநபர் தகவல்
பிறந்த பெயர்கோமதி மாரிமுத்து
தேசியம்இந்தியர்
பிறப்பு8 பெப்ரவரி 1989 (1989-02-08) (அகவை 35)
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)விரைவோட்டம்
பதக்கத் தகவல்கள்
நாடு  இந்தியா
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 ஆசிய தடகளப் போட்டி, தோகா மகளீர் 800 மீ ஓட்டப்பந்தையம்

மேற்கோள்கள்

தொகு
  1. ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி - பிபிசி
  2. "ஆசிய தடகள போட்டி: இந்தியாவிற்கு முதல் தங்கம் பெற்று கொடுத்த தமிழக வீராங்கனை". சமயம். 23 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "மைதானமே இல்லாத ஊரில் இருந்து வரலாறு படைத்த கோமதி: கண்கலங்க வைக்கும் பின்னணி!". News 18. 23 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. "ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவிற்கு முதல் தங்கத்தை வென்ற தமிழக வீராங்கனை..!". புதிய தலைமுறை. 23 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமதி_மாரிமுத்து&oldid=3929353" இலிருந்து மீள்விக்கப்பட்டது