கோயம்புத்தூர் கடலியல் கல்லூரி

கோயம்புத்தூர் கடலியல் கல்லூரி (ஆங்கிலம்:Coimbatore Marine College) என்பது தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் கடல்சார்ந்த படிப்புகளையும் பயிற்சிகளையும் அளிக்கும் தனியார் இருபாலர் கல்லூரியாகும்.[1] 2001 ஆம் ஆண்டு கோவையின் மயிலேறிபாளையத்தில் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. இந்திய கப்பல்துறை இயக்ககத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற இக்கல்லூரி இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகிறது.[2] இக்கல்லூரியில் கடல் அறிவியல், கடல் பொறியியல், கப்பல் மற்றும் போக்குவரத்து நிர்வாகவியல், இளங்கலை வணிக நிர்வாகவியல், முதுகலை வணிக நிர்வாகவியல் போன்ற துறைகள் உள்ளன.[3]

கோயம்புத்தூர் கடலியல் கல்லூரி
சிஎம்சி
வகைதனியார் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2001
தலைவர்எஸ். ஐ. நாதன்
மாணவர்கள்700+
அமைவிடம்
மயிலேறிபாளையம், கோயம்புத்தூர் -641032

10°51′46.988″N 77°0′30.965″E / 10.86305222°N 77.00860139°E / 10.86305222; 77.00860139
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புஇந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம்
இணையதளம்www.cmcmarine.in

மேற்கோள்கள் தொகு

  1. "தன்விவரக் குறிப்பு". cmcmarine. பார்க்கப்பட்ட நாள் 24 October 2023.
  2. "List of DGS Approved Maritime Training Institutes". Archived from the original on 19 April 2018. பார்க்கப்பட்ட நாள் 19 April 2018.
  3. "மகத்தான மரைன் இன்ஜினியரிங்". தமிழ் இந்து. https://www.hindutamil.in/news/opinion/columns/164842-.html. பார்த்த நாள்: 24 October 2023. 

வெளியிணைப்புகள் தொகு