கோயம்புத்தூர் மாநகரக் காவல்

கோயம்புத்தூர் மாநகரக் காவல் (Coimbatore City Police (CCP)) அல்லது கோவை மாநகரக் காவல் என்பது தமிழ்நாடு காவல் துறையின் கோயம்புத்தூர் மற்றும் கோயம்புத்தூரின் புறநகரான போத்தனூர் பகுதிகளில் தன் செயல் எல்லையைக் கொண்டு சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றத் தடுப்புப் பணிகளில் ஈடுபடும் ஒரு காவல் பிரிவு ஆகும்.

அதிகாரக் கட்டமைப்பு

தொகு

இவ்வமைப்பு நேரடியாக இந்திய காவல் பணி (இ. கா. ப.) தேர்வு பெற்று காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police - SP) பணி அல்லது அதற்குச் சமமான பணியில் அனுபவம் பெற்று, பதவி உயர்வில் வரும் 'ஆணையாளர்' (Commissioner of Police -COP) ஒருவரால் நிருவகிக்கப்படுகிறது. இந்த ஆணையாளருக்குக் கீழ் துணை ஆணையாளர் (தலைமையிடம்), துணை ஆணையாளர் (சட்டம் & ஒழுங்கு), துணை ஆணையாளர் (குற்றத் தடுப்பு) துணை ஆணையாளர் (போக்குவரத்து) என்று காவல் கண்காணிப்பாளர் தகுதியில் துணை ஆணையாளர்கள்(Deputy Commissioners - DC) இருப்பர். அவர்களுக்குக் கீழ் துணைக் காவல் கண்காணிப்பாளர் தகுதியில் உதவி ஆணையாளர்கள்(Assistant Commissioners- AC) இருப்பர்.

உதவி ஆணையாளர்களுக்குக் கீழ் ஆய்வாளர்கள் (Inspectors) இருப்பர். இந்த ஆய்வாளர்கள் பொறுப்பில் தான் காவல் நிலையங்கள் இருக்கும். இவர்களுக்குக் கீழ் உதவி ஆய்வாளர்கள் (Sub Inspectors) மற்றும் தலைமைக் காவலர்கள் (H.C.), எழுத்தர், காவலர்கள் (PC) மற்றும் ஓட்டுனர்கள் இருப்பர்.

வெளி இணைப்புகள்

தொகு