கோயம்புத்தூர் விழா

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் நகரில் நடைபெறும் திருவிழா

கோயம்புத்தூர் விழா (Coimbatore Vizha) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள நகரமான கோயம்புத்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு திருவிழாவாகும். [1] ஒன்பது நாள் நிகழ்ச்சியாக நடைபெறும் இவ்விழா கோவையின் வற்றாத உணர்வைக் கொண்டாட அனைத்து குடிமக்களையும் ஒன்றிணைக்க முயல்கிறது.

கோயம்புத்தூர் விழா
Coimbatore Vizha
நிகழ்நிலைநடக்கிறது
வகைநகரத் திருவிழா
தொடக்கம்4 சனவரி 2019 (2019-01-04)
முடிவு12 சனவரி 2019 (2019-01-12)
காலப்பகுதிஆண்டுதோறும்
அமைவிடம்(கள்)கோயம்புத்தூர்
நாடுஇந்தியா
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்15
துவக்கம்2 சனவரி 2009 (2009-01-02)
நிறுவனர்சங்கர் வானவராயர்
முந்தைய நிகழ்வுகோயம்புத்தூர் விழா 2018 (5 - 12 சனவரி)
தலைவர்விஷ்ணு பிரபாகர் (தலைவர்)
வலைத்தளம்
coimbatorevizha.com

விழாவின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்று, திறந்த இரண்டு அடுக்கு பேருந்து ஆகும். இது திருவிழாவின் அடையாளங்களையும் இலவச நகர சுற்றுப்பயணங்களையும் வழங்குகிறது.[2] பேருந்துப் பயணம் நகரத்தில் உள்ள பிரபலமான இடங்கள் மற்றும் சில பாரம்பரிய கட்டிடங்களை உள்ளடக்கியதாகும்.

வரலாறு

தொகு

கோயம்புத்தூர் விழா சங்கர் வாணவராயரால் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வு ஆதரவு நிறுவனங்கள், நிகழ்வுகள் மற்றும் குடிமக்கள் பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ந்துள்ளது. முதல் பதிப்பில், 30 பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் மதத் தலைவர்களுடன் பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று, மத நல்லிணக்கத்தையும் சிறந்த புரிதலையும் மேம்படுத்தினர். .

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற விழா 8 ஆவது பதிப்பாக சனவரி 29 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெற்றது. 2017 ஆம் ஆண்டு 9 ஆவது பதிப்பாக சனவரி 27 ஆம் தேதியன்று 50 கூட்டு நிறுவனங்கள் மற்றும் 90 நிகழ்வுகளுடன் நடைபெற்றது. [3] கோவை பாட்டு, கோவைக்கான ஒலி ஒளி காட்சி அஞ்சலி மற்றும் சிப்பி கோயம்புத்தூரின் சின்னம் என்ற விழா ஆகியவை அறிவிக்கப்பட்டன. இந்த பதிப்பிற்கான தனித்துவமாக நடபெற்ற நிகழ்வுகளில் ரோபோபெசுட்டும் தலைக்கவச விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றன. [4] 2018 ஆம் ஆண்டு 10 ஆவது பதிப்பு சனவரி 5-12 வரை 120 நிகழ்வுகளை முன்வைத்தது. [5] இந்த ஆண்டில் நகரின் திறந்த இரட்டை அடுக்கு பேருந்து பயணங்கள் ஒரு தனித்துவமான கூடுதல் சிறப்பாகும். [6] கோயம்புத்தூரின் ஏழு முக்கிய வீதிகள் "விழா வீதிகள்" என நியமிக்கப்பட்டன. தனித்துவமான நிகழ்வுகளாக சுமார் 100 கலைஞர்கள் பங்கு பெற்ற "ஓவிய சந்தை" யும் , மொத்த நகரத்தையும் சுத்தம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. [7]

2019 ஆம் ஆண்டு பதினொன்றாவது பதிப்பு சனவரி 4 முதல் 12 வரை விழா நடைபெற்றது. இதில் 103 பங்குதாரர்கள் மற்றும் 150 நிகழ்வுகள் இடம்பெற்றன. [8] கோயம்புத்தூர் விழா அணிவகுப்பு, உணவு தெரு, திறந்தநிலை வினாடி வினா, பாரம்பரிய கார் காட்சி, திரைப்பட விழா, பாரம்பரிய நடைகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப காட்சி பெட்டி, கலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவை இந்த பதிப்பின் முக்கிய நிகழ்வுகளாகும்.

சின்னம்

தொகு

சிப்பி சின்னம் தமிழ்நாட்டின் மாநிலப் பறவையான பொதுவான மரகதப் புறாவைக் குறிக்கிறது . சிப்பி சின்னம் மாணிக்க இளவரசி என்றும் அழைக்கப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Journey for unity marks inauguration of Coimbatore Vizha". 
  2. "Coimbatore Vizha begins with double-decker bus flag off". The Hindu. 5 January 2019. https://www.thehindu.com/news/cities/Coimbatore/coimbatore-vizha-begins-with-double-decker-bus-flag-off/article25917752.ece. 
  3. 3.0 3.1 "All set for Coimbatore Vizha". The Hindu. 25 January 2017. https://www.thehindu.com/news/cities/Coimbatore/All-set-for-Coimbatore-Vizha/article17090815.ece. 
  4. "All set for Coimbatore Vizha". The Hindu. 25 January 2017. https://www.thehindu.com/news/cities/Coimbatore/All-set-for-Coimbatore-Vizha/article17090815.ece. 
  5. "10th edition of Coimbatore Vizha starts today". The Hindu BusinessLine. 8 January 2018. https://www.thehindubusinessline.com/news/national/10th-edition-of-coimbatore-vizha-starts-today/article10011466.ece. 
  6. "Coimbatore Vizha brings a double decker bus to the city". The Hindu. 10 January 2018. https://www.thehindu.com/life-and-style/coimbatore-vizha-brings-perhaps-the-best-treat-for-young-and-old-alike-as-it-arranges-a-double-decker-ride-through-the-city/article22412019.ece. 
  7. "10th edition of Coimbatore Vizha launched". The Hindu. 25 November 2017. https://www.thehindu.com/news/cities/Coimbatore/10th-edition-of-coimbatore-vizha-launched/article20851514.ece. 
  8. "150 events lined up for Coimbatore Vizha 2019". The Times of India. 25 November 2018. https://timesofindia.indiatimes.com/city/coimbatore/150-events-lined-up-for-coimbatore-vizha-2019/articleshow/66790153.cms. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோயம்புத்தூர்_விழா&oldid=3379303" இலிருந்து மீள்விக்கப்பட்டது