படை அமைப்பு
தற்காலத்தில் பெரும்பாலான நாடுகளின் படை அமைப்பு ஒரு சீராகவே உள்ளது. உலகின் பல நாடுகளின் படைகள் அமெரிக்கா, பிரிட்டன், நேட்டோ படைகளின் படைப்பிரிவுகள் அமைப்பையும், தர வரிசையையும் பயன்படுத்துகின்றன. சில நாடுகளில் சில வேறுபாடுகள் இருந்தாலும் கீழ்காணும் பட்டியலில் உள்ளவை பொதுவாக பெரும்பாலான நாடுகளுக்குப் பொருந்தும்.
தரைப்படைப் பிரிவுகள்தொகு
ஏ.பி.பி-6ஏ நேட்டோ குறியீடு | பெயர் | எண்ணிக்கை | உட்பிரிவுகள் | தளபதி |
---|---|---|---|---|
XXXXXX | பிரதேசம் அல்லது களம் | 1,000,000+ | 4+ ஆர்மி குரூப்புகள் | ஃபீல்டு மார்ஷல் / ஜெனரல் ஆஃப் தி ஆர்மி[1] |
XXXXX | ஆர்மி குரூப், முனை | 250,000+ | 2+ ஆர்மிகள் | ஜெனரல் / ஐந்து நட்சத்திர ஜெனரல் / ஃபீல்டு மார்ஷல் |
XXXX | ஆர்மி | 60,000–100,000+ | 2–4 கோர்கள் | ஜெனரல் / நான்கு நட்சத்திர ஜெனரல் / கர்னல் ஜெனரல் |
XXX | கோர் | 30,000–80,000 | 2+ டிவிஷன்கள் | லெப்டினன்ட் ஜெனரல்/ கோர் ஜெனரல் / மூன்று நட்சத்திர ஜெனரல் |
XX | டிவிசன் | 10,000–20,000 | 2–4 பிரிகேடுகள் அல்லது ரெஜிமண்டுகள் | மேஜர் ஜெனரல்/டிவிசனல் ஜெனரல் / இரண்டு நட்சத்திர ஜெனரல் |
X | பிரிகேட் | 2000–5000 | 2+ ரெஜிமண்டுகள், 3–6 பட்டாலியன்கள் அல்லது பொதுநலவாய ரெஜிமண்டுகள் | பிரிகேடியர் / பிரிகேடியர் ஜெனரல் / ஒரு நட்சத்திர ஜெனரல் |
III | ரெஜிமண்ட் /குரூப் | 2000–3000 | 2+ பட்டாலியன்கள் | கர்னல் |
II | தரைப்படை பட்டாலியன்,[2] | 300–1000 | 2–6 கம்பனிகள் | லெப்டினன்ட் கர்னல் |
I | கம்பனி[3] | 70–250 | 2–8 பிளாட்டூன்கள் அல்லது துருப்புகள் | சீஃப் வாரண்ட் ஆஃபீசர், கேப்டன் அல்லது மேஜர் |
••• | பிளாட்டூன் அல்லது பொதுலநவாய துருப்பு | 25–60 | 2+ ஸ்குவாடுகள் அல்லது செக்ஷன்கள் | வாரண்ட் ஆஃபீசர், முதல் அல்லது இரண்டாம் லெப்டினன்ட் |
•• | செக்ஷன் அல்லது பேட்ரோல் | 8–12 | 2+ ஃபயர்டீம் | கார்பரல் to சார்ஜண்ட் |
• | ஸ்குவாட் அல்லது குரூ | 8–16 | 2+ ஃபயர்டீம்கள் or 1+ செல்கள் | கார்ப்பரல் அல்லது ஸ்டாஃப் சார்ஜண்ட் |
Ø | ஃபயர்டீம் | 4–5 | n/a | லேன்ஸ் கார்ப்பரல் to சார்ஜண்ட் |
Ø | 1 | ஃபயர் அண்ட் மனூவர் டீம் | n/a | - |
இப்பட்டியலிள்ள அனைத்து பிரிவுகளும் அனைத்து நாட்டுத் தரைப்படைகளிலும் இருப்பதில்லை. எ.கா. நேட்டோ படைகளில் ரெஜிமண்ட் இருப்பதில்லை. பட்டாலியனுக்கு அடுத்து பிரிகேடு தான். ஆர்மி, ஆர்மி குரூப், களம் போன்ற பெரிய படைப்பிரிவுகள் மிகப்பெரிய ராணுவங்களில் மட்டுமே உள்ளன.
கடற்படைப் பிரிவுகள்தொகு
கடற்படைப் பிரிவுகளின் அமைப்புகள் தரைப்படைப் பிரிவுகளைப் போல உலகெங்கும் சீராக பின்பற்றப்படுவதில்லை. ஏனெனில் கடற்படைப் பிரிவுகள் இலக்கைப் பொறுத்தே உருவாக்கப்படுகின்றன. தரைப்படைகளைப் போல அவை நிரந்தரமானவையல்ல. ஃப்ளோடில்லா வுக்கு மேலுள்ள பிரிவுகள் பெரிய கடற்படைகளில் மட்டுமே காணப்படுகின்றன.
பெயர் | கப்பல்களின் வகைகள் | கப்பல்களின் எண்ணிக்கை | தளபதி |
---|---|---|---|
நேவி or அட்மிரால்டி | ஒரு கடற்படையிலுள்ள அனைத்து கப்பல்களும் | 2+ ஃபிளீட்டுகள் | ஃபிளீட் அட்மைரல் / அட்மைரல் ஆஃப் தி ஃபிளீட் or கிராண்ட் அட்மைரல் |
ஃபிளீட் | ஒரு பெருங்கடலில் அல்லது கடற்பகுதியில் உள்ள அனைத்து கப்பல்களும் | 2+ பாட்டில் ஃபிளீட் அல்லது டாஸ்க் ஃபோர்சு | அட்மைரல் |
பாட்டில் ஃபிளீட் or டாஸ்க் ஃபோர்சு | அனைத்து வகைக்கப்பல்கள் | 2+ டாஸ்க் குரூப்புஅகள் | வைஸ் அட்மைரல் |
டாஸ்க் குரூப்[4] | 2+ டாஸ்க் யூனிட்டுகள் அல்லது ஸ்குவாடரன்கள் | ரியர் அட்மைரல் | |
ஸ்குவாடரன் அல்லது டாஸ்க் யூனிட்டு | பொதுவாக பெரும் போர்க்கப்பல்கள் மட்டும் | ஒரு சிலமட்டும் | ரியர் அட்மைரல் / கமடோர் / ஃப்ளோட்டில்லா அட்மைரல் |
ஃப்ளோட்டில்லா அல்லது டாஸ்க் யூனிட்டு | பெரும் போர்க்கப்பல்களல்லாதவை | ஒரே வகையான சில கப்பல்கள் | ரியர் அட்மைரல் / கமடோர் / ஃப்ளோட்டில்லா அட்மைரல் |
டாஸ் எலிமன்ட் | ஒரே ஒரு கப்பல் | ஒன்று | கேப்டன் அல்லது கமாண்டர் |
துணைக் கப்பல்கள் (Auxiliary ships) கேபட்ன் தரத்துக்கு கீழிலுள்ள அதிகாரிகளின் பொறுப்பில் தான் ஒப்படைக்கப்படுகின்றன. கோர்வெட்டுகள், துப்பாக்கிப் படகுகள், நீர் கண்ணி நீக்கும் கப்பல்கள், ரோந்துப் படகுகள், ஆற்றுப் படகுகள், டொர்பீடோ படகுகள் போன்றவை துணைக்கப்பல்கள் பகுப்பில் சேரும். இவை தவிர டெஸ்டிராயர்களில் அளவில் சிறியவையும் ஃபிரிகேட்டுகளும் துணைக்கப்பல்களாகக் கருதப்படுகின்றன.
வான்படைப் பிரிவுகள்தொகு
தரைப்படை, கடற்படைகளைப் போலலாமல் வான்படைப் பிரிவுகள் நாட்டுக்கு நாடு வெகுவாக மாறுபடுகின்றன. ஏனைய படைத்துறை விஷயங்களில் சீராக அமைந்திருக்கும் அமெரிக்க, பிரிட்டிஷ் வான்படைகளின் அமைப்புகள் கூட வெகுவாக மாறுபடுவதால், அனைத்து வான்படைகளுக்கும் பொதுவான அமைப்புப் பட்டியல் வகுக்க இயலாது.
மேற்கோள்கள்தொகு
- ↑ பொதுவாக போர்க்காலங்களில் மட்டும் இந்த தரம் வழங்கப்படுகிறது
- ↑ அமெரிக்க குதிரைப்படை ஸ்குவாட்ரன்களும் மற்றும் பொதுநலவாய கவச ரெஜிமண்டுகளும் இதற்கு சமானம்
- ↑ பீரங்கி குழுமங்கள், அமெரிக்க குதிரைப்படை துருப்பு, பொதுநலவாய கவசம் மற்றும் போர் பொறியியல் ஸ்குவாட்ரன்கள் இதற்கு சமானம்
- ↑ Group. GlobalSecurity.org. Retrieved 2009-08-30.