கோலன் வகைப்படுத்தல்

நூலகத்தில் நூல்களை வகைப்படுத்தும் முறை

கோலன் வகைப்படுத்தல் தொகு

கோலன் வகைப்படுத்தல் (Colon classification) என்பது நூலகத்தில் உள்ள தகவல் மூலங்களை வகைப்படுத்த சீர்காழி இரா. அரங்கநாதனால் அறிமுகப்படுத்த பட்ட ஒரு பகுப்பு முறையாகும். இதன் முதல் பதிப்பு 1933 ம் ஆண்டு வெளியானது.[1] இதுவரை 6 பதிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் பெரும்பாலான பொது நூலகத்தில் இம்முறை பயன்படுத்தபடுகிறது.

அமைப்பு தொகு

இந்த பகுப்பு முறை 42 வகையாக பிரிக்கப்பட்டு அதற்கென ஒரு எழுத்து அல்லது குறியீடு ஒதுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நூலக காங்கிரஸ் வகைப்படுத்தலின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.

உட்கூறுகள் தொகு

இப்பகுப்பில் 5 முதன்மை பிரிவுகள் பயன்படுத்தப்பட்டு பகுப்பிற்கு உதவுகிறது அவை PMEST என்பதாகும்.[2]

P - ஆளுமை

M - கருப்பொருள்

E - ஆற்றல்

S - இடம்

T - நேரம்

மேற்கோள்கள் தொகு

  1. Raghavan, K. S (December 2015). "The colon classification: a few considerations on its future". Annals of Library and Information Studies 62: 231–238. http://op.niscair.res.in/index.php/ALIS/article/view/11404/612. 
  2. GOPINATH (M A). Colon classification: Its theory and practice. Library Herald. 26, 1–2; 1987; 1–3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலன்_வகைப்படுத்தல்&oldid=3894241" இலிருந்து மீள்விக்கப்பட்டது