கோலார் ஆறு

மகாராட்டிரத்தில் பாயும் ஆறு

கோலார் ஆறு (Kolar River) என்பது இந்தியாவின் மகாராட்டிராவில் உள்ள நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆறாகும். இது சவ்னர் நகரத்திற்கு மேற்பகுதியில் தென்கிழக்கிலிருந்து பாய்ந்து கன்ஹான் ஆறுடன் சந்திக்கிறது. இது கோதாவரி ஆற்றுப் படுகையில் உள்ளது. கோலார் ஆறு சவ்னர் வட்டத்திற்கும் ராம்டெக் வட்டத்திற்கும் இடையே எல்லையாக உள்ளது.[1]

கோரடி அருகே கோலார் ஆறு

தோற்றமும் ஆற்றோட்டமும்

தொகு

கோலார் ஆறு கடோல் வட்டத்தில் சுமார் 600 மீட்டர் உயரத்தில் வடகிழக்கு மூலையில் (21°28′01″N 78°39′52″E / 21.46694°N 78.66444°E / 21.46694; 78.66444 ) உருவாகிறது.[1] தென்கிழக்காக சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் பில்காபர் மலைத்தொடரைக் கடந்து பாய்கிறது.[1] இதன் பிறகு இதன் வலதுபுறத்தில் உள்ள பிப்லா கிராமத்தைக் கடந்து, நான்கு கிலோமீட்டர் தூரம் கிழக்கே திரும்பி திடங்கி கிராமத்தை நோக்கி கோலார் அணை நீர்த்தேக்கத்தில் நுழைகிறது. கோலார் அணையைக் கடந்த நான்கு கிலோமீட்டர் தூரத்திற்குக் கிழக்கே தொடர்ந்து பாய்ந்து தென்கிழக்கே திரும்பி கெட்டிசுர்லா கிராமத்திற்குச் சற்று முன் செல்கிறது. மற்றொரு ஏழு கிலோமீட்டர் தொலைவில் கோலார் ஆற்றினை சாவோனர் (சாவ்னர்) நகரின் மையத்திற்கு வருகிறது. இது தென்கிழக்கில் படன்சவாங்கி நகரத்தைத் தாண்டி, இதன் முக்கிய துணை ஆறான சந்திரபாகா ஆற்றினை வலப்புறத்திலில் (மேற்கில்) சந்திக்கிறது. தொடர்ந்து தென்கிழக்கே தோலா கிராமத்தில் வலதுபுறம் கன்கான் ஆற்றுடன் சேர்கிறது.[2][3] இந்த ஆற்றோட்டம் முழுவதும் நாக்பூர் மாவட்டத்தில் பாய்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Census of India, 1981: Maharashtra - Volume 17. Director of Census Operations, Maharashtra. 1986. p. 8.
  2. Khatry, Rajendra (20 September 1999). "A village lives in terror as water continues to rise". Indian Express. http://expressindia.indianexpress.com/news/ie/daily/19990920/ige20006.html. 
  3. Nagpur (topographic map, 1:250,000), series U502, sheet NF 44-09, United States Army Map Service, June 1959
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலார்_ஆறு&oldid=3395598" இலிருந்து மீள்விக்கப்பட்டது