ராம்டெக் (Ramtek) (மராத்தி: रामटेक) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் நாக்பூர் மாவட்டத்தில் 17 வட்டங்களுடன் கூடிய நகராட்சி மன்றத்துடன் அமைந்த நகரம் ஆகும்.

ராம்டெக்
रामटेक
நகரம்
ராம்டெக் கோயிலின் கூம்பு கோபுரம்
ராம்டெக் கோயிலின் கூம்பு கோபுரம்
ராம்டெக் is located in மகாராட்டிரம்
ராம்டெக்
ராம்டெக்
மகாராஷ்டிரா மாநிலத்தில் ராம்டெக் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 21°23′40″N 79°19′35″E / 21.39444°N 79.32639°E / 21.39444; 79.32639
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்நாக்பூர்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்ராம்டெக் நகராட்சி
ஏற்றம்
345 m (1,132 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்22,310
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
441106
வாகனப் பதிவுMH-40
ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ராம்டெக் கோயில்

வரலாறு

தொகு
 
ராமர் கோயிலிருந்து ராம்டெக் நகரத்தின் காட்சி

14 ஆண்டு வனவாசத்தின் போது இராமன், சீதை மற்றும் இலக்குமணன் ஆகியோர் ராம்டெக் பகுதியில் குடில் அமைத்து தங்கியதாகவும், அருகில் அகத்திய முனிவரின் ஆசிரமம் இருந்ததாக, வால்மீகி இராமாயண காவியத்தில் கூறப்பட்டுள்ளது. இப்பகுதியில் வாழ்ந்த முனிவர்களை துன்புறுத்தும் அரக்கர்களை அழிப்பதாக இராமர் சூளுரைத்ததால், இப்பகுதிக்கு ராம்டெக் பெயராயிற்று. மராத்தி மொழியில் டெக் என்பதற்கு சூளுரை எனும் பொருள்படும். இங்குள்ள ராம்டெக் கோயிலில் இராமரின் பாதுகைகள் வைத்துப் பல நூற்றாண்டுகளாகப் பூஜை செய்யப்படுகிறது.

தற்போதுள்ள கோயிலை 400 ஆண்டுகளுக்கு முன்னர் சீரமைத்து கட்டியவர் நாக்பூர் மன்னரான ரகுஜி போன்சலே ஆவார்.

ராம்டெக் கோயில் சமசுகிருத மொழி மகாகவி காளிதாசருடன் தொடர்புடையது. இங்குள்ள இராம்டெக் மலையில் அமர்ந்து காளிதாசர் மேகதூதம் எனும் சமசுகிருத காவியக் கவிதையை இயற்றினார்.

சமணர் கோயில்

ராம்டெக் மலையில் உள்ள சமணக் கோயிலில் 16-வது தீர்த்தங்கரான சாந்திநாதரின் சிலை அமைந்துள்ளது.

கி பி 18-ஆம் நூற்றாண்டில், நாக்பூர் போன்ஸ்லே மன்னர், ராம்டெக் பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த கோண்டு இன மன்னரை வென்று ராம்டெக் பகுதியை கைப்பற்றினர்.

புவியியல்

தொகு
 
ராம்டெக் நகரம் மற்றும் ஆற்றை உள்ளடக்கிய நாக்பூர் மாவட்டத்தின் வரைபடம்

இராம்டெக் நகரம் கடல் மட்டத்திலிருந்து 1,131 அடி (345 மீ) உயரத்தில், நாக்பூர் நகரத்திலிருந்து 50 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்

தொகு

2011 -ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ராம்டெக் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 22,310 ஆகும். அதில் ஆண்கள் 11,321 ஆகவும்; பெண்கள் 10,989 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 2193 ஆக உள்ளனர். பாலின விகிதம் 100 ஆண்களுக்கு, 971 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 89.53 % ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 94.06 % ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 84.89 %. ஆகவும் உள்ளது.

ராம்டெக் நகரத்தில் இந்துக்கள் 84.50%; பௌத்தர்கள் 8.47%; இசுலாமியர்கள் 6.02; சமணர்கள் 0.76%; மற்றவர்கள் 0.93% ஆக உள்ளனர். [1]

மேற்கோள்கள்

தொகு
  1. Ramtek Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்டெக்&oldid=3801668" இலிருந்து மீள்விக்கப்பட்டது