கோலோவின்-சிவ்ட்சேவ் அட்டவணை

கோலோவின் சிவ்ட்சேவ் அட்டவணை (Golovin–Sivtsev table)(உருசியம்: Таблица Головина-Сивцева) பார்வைத் திறனைப் பரிசோதிப்பதற்கான ஒரு தரப்படுத்தப்பட்ட அட்டவணை ஆகும். இதனை 1923-ல் சோவியத் கண் மருத்துவர்களான செர்ஜி கோலோவின் மற்றும் டி. ஏ. சிவ்ட்சேவ் ஆகியோர் உருவாக்கினர்.[1] சோவியத் ஒன்றியத்தில், இது இந்த வகையில் மிகவும் பொதுவான அட்டவணையாகும். மேலும் இது 2008ஆம் ஆண்டிற்குப் பின் பல நாடுகளில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது.[2]

இந்த அட்டவணையில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 12 வரிசைகள் உள்ளன. இதில் பார்வை கூர்மை மதிப்பு 0.1 மற்றும் 2.0 இடையானதாக உள்ளது.[3] இடது பகுதியில் சிரில்லிக் எழுத்துக்கள் Ш, Б, М, Н, К, Ы, மற்றும் И தொடர்ச்சியான வரிசையில் உள்ளது. அட்டவணையின் வலது பகுதி லேண்டால்ட் சி குறியீடுகளின் வரிசையைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு எழுத்தின் அகலமும் அதன் உயரத்திற்குச் சமம், மற்றும் வரையறைகள் நிலையானவை.15ஒட்டுமொத்த அளவின் இடைவெளிகளுடையன.

மதிப்பு D, ஒவ்வொரு வரிசையின் இடதுபுறத்திலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1.0 பார்வைக் கூர்மை கொண்ட ஒரு நபர் தொடர்புடைய வரிசையைப் படிக்கக்கூடிய தூரத்தை மீட்டரில் கொடுக்கிறது. மதிப்பு V, வலதுபுறத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 5 மீட்டர் தூரத்திலிருந்து வரிசையைப் படிக்கத் தேவையான குறைந்தபட்ச பார்வைக் கூர்மையை அளிக்கிறது. முதல் வரிசையில் 70 மிமீ அளவு (V = 0.1) குறியீடுகள் உள்ளன. இரண்டாவது வரிசை, 35 மிமீ எனவும் கீழ் உள்ள மூன்றாவது வரிசை, 7 மிமீ (V = 1.0) எனவும் அதனை அடுத்தது 3.5 மிமீ (V = 2.0) எனவும் குறிக்கின்றது.

1 ஆர்க்மினிட் கோணத்தில் கருப்பு மற்றும் வெள்ளை வடிவத்தை அடையாளம் காண்பது 1.0 பார்வைக் கூர்மையாகக் கருதப்படுகிறது, இது 3.44 மீ தூரத்திற்கு 1 மிமீ ஆகும். 7 மிமீ அளவுள்ள ஒரு எழுத்து 1.4 மிமீ மாதிரி இடைவெளிகளைக் கொண்டுள்ளது, எனவே 5 மீ பார்வை தூரத்திற்கு மேல் அது சுமார் 1 கோணத்துளி கோணத்தைக் கொடுக்கிறது (atan(0.007/5/5)≈0.963').

மேற்கோள்கள்

தொகு
  1. (in உருசிய மொழி) Refraction and acuity பரணிடப்பட்டது 2012-04-21 at the வந்தவழி இயந்திரம்
  2. (in உருசிய மொழி) Golovin–Sivtsev table for determining the visual acuity பரணிடப்பட்டது 2008-06-05 at the வந்தவழி இயந்திரம்
  3. (in உருசிய மொழி) Some information on Golovin–Sivtsev table பரணிடப்பட்டது 2008-12-01 at the வந்தவழி இயந்திரம் — that website as a whole doesn't seem to be reliable, but it seems to present reliable information on Golovin-Sivtsev table dimensions