கோல்மேனியா
கோல்மேனியா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | ஆர்த்தாப்பிடிரா
|
குடும்பம்: | பயர்கோமார்பிடே
|
பேரினம்: | கோல்மேனியா போலிவர், 1910
|
இனம்: | கோ. பெனாரியோயிட்சு
|
இருசொற் பெயரீடு | |
கோல்மேனியா பெனாரியோயிட்சு போலிவர் 1910 |
கோலேமேனியா (Colemania) பெனாரியோயிட்சு என்பது ஜோலா அல்லது தக்காண வெட்டுக்கிளி என்றும் அழைக்கப்படும் இந்தியத் தீபகற்பத்தில் உள்ள ஒரே ஒரு சிற்றினமாக உள்ள கோல்லேமேனியா பேரினத்தைச் சேர்ந்த இறக்கைகள் இல்லாத வெட்டுக்கிளி சிற்றினமாகும். இது சில நேரங்களில் சோளம் பயிர்களுக்குச் சேதத்தை ஏற்படுத்துகிறது. இப்பேரினத்திற்கு கே. குனிகண்ணனுடன் இணைந்து ஒன்னாலிருந்து சிற்றினங்களின் வகை மாதிரிகளைப் பெற்று தென்னிந்தியாவில் உள்ள இனங்களைப் பற்றி ஆய்வு செய்த லெசுலி கோல்மேன் நினைவாகப் பெயரிடப்பட்டது. இதை எசுப்பானியா பூச்சியியல் நிபுணர் இக்னாசியோ பொலிவர் விவரித்தார்.[1]
இந்தச் சிற்றினம் ஒரு புதிய இனம் என்று விவரிக்கப்படுவதற்கு முன்பே மேக்சுவெல் லெப்ராய் என்பவரால் குறிப்பிடப்பட்டது. இவர் இதைத் தக்காண வெட்டுக்கிளி என்று அழைத்தார். இதே பகுதியில் காணப்படும் சிறிய ஆர்த்தாக்ரிசு சிற்றினங்களுடன் அடையாளங் காணுவதில் குழப்பமடையலாம். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Bolívar, I. (1910). "Nuevo Locustido de la India, perjudicial a la Agricultura (Colemania sphenarioides Bol.)". Boletín de la Real Sociedad Española de Historia Natural 10: 318–321. https://bibdigital.rjb.csic.es/idviewer/10554/319.
- ↑ Coleman, Leslie (1911). The Jola or Deccan Grasshopper (Colemania sphenarioides, Bol.). Entomological series. Government of Mysore.