சோளம் சிறுதானியம்
சோளம் சிறுதானியம், (Sorghum bicolor, பொதுவாக சோர்கம்[2]) மற்றும் சிறப்பு சிறுதானியம்,[3] துர்ரா, ஜோவரி / ஜோவர், அல்லது மிலோ, எனவும் அறியப்படுகின்ற இந்த புல் இனம் இதன் தானியத்திற்காக வேளாண்மை செய்யப்படுகின்றது. இதன் தானியம் மனிதர்கள்,வீட்டு விலங்கினங்களுக்கான உணவிற்காகவும் எத்தனால் தயாரிப்பிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆபிரிக்காவில் துவங்கிய சோர்கம் தற்போது உலகின் வெப்ப மண்டலம், வெப்பமண்டலம் அணவிய பகுதிகளில் பரவலாக விளைவிக்கப்படுகிறது.[4] நெல், கோதுமை, மக்காச்சோளம், வாற்கோதுமை ஆகியவைகளுக்கு அடுத்து உலகின் ஐந்தாம் முதன்மையான தானியமாக சோளம் விளங்குகின்றது; 2018இல் உலகின் ஆண்டு உற்பத்தி 59.34 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது.[5] எஸ். பைகலர் என அறியப்படும் இத்தாவரவினம் பொதுவாக ஆண்டுக்கு ஒரு போகம் விளைவிக்கப்படுகின்றது; இருப்பினும் சிலவிடங்களில் ஆண்டு முழுமையும் விளைவிக்கப்படுகின்றன. சோளம் 4 m உயரம் வரை அடர்த்தியாக வளர்கின்றது. இதன் தானியம் 2 முதல் 4 மிமி அளவில் உள்ளன. இனிப்புச் சோளம் என்ற வகை தீவனம், சீனிப்பாகு,எத்தனால் தயாரிப்பிற்காக வளர்க்கப்படுகின்றன. இவை தானியத்திற்காக வளர்க்கப்படுபவையை விட கூடுதலான உயரம் உடையவை.[6][7]
சோளம் சிறுதானியம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Sorghum |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/SorghumS. bicolor
|
இருசொற் பெயரீடு | |
Sorghum bicolor (L.) Moench | |
வேறு பெயர்கள் [1] | |
பட்டியல்
|
வேளாண் செய்யப்படுகின்ற வகைச் சோளம் சோர்கம் பைகலர் எனப் பெயரிடப்பட்டுள்ளது; காட்டுச் சோளங்கள் சோளம் என்ற தாவரவியல் இனத்தின் பிற வகைகளாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sorghum bicolor (L.) Moench — The Plant List". www.theplantlist.org.
- ↑ "Sorghum bicolor". Natural Resources Conservation Service PLANTS Database. USDA.
- ↑ BSBI List 2007 (xls). Botanical Society of Britain and Ireland. Archived from the original (xls) on 2015-06-26. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.
- ↑ Dillon, Sally L.; Shapter, Frances M.; Henry, Robert J. et al. (1 September 2007). "Domestication to Crop Improvement: Genetic Resources for Sorghum and Saccharum (Andropogoneae)". Annals of Botany 100 (5): 975–989. doi:10.1093/aob/mcm192. பப்மெட்:17766842.
- ↑ "FAOSTAT". www.fao.org. பார்க்கப்பட்ட நாள் 2020-09-27.
- ↑ "Grassland Index: Sorghum bicolor (L.) Moench". Archived from the original on 2017-11-19. பார்க்கப்பட்ட நாள் 2021-08-29.
- ↑ "Sweet Sorghum". Sweet Sorghum Ethanol Producers. பார்க்கப்பட்ட நாள் 13 November 2012.
வெளி இணைப்புகள்
தொகு- Crop Wild Relatives Inventory[தொடர்பிழந்த இணைப்பு]: reliable information source on where and what to conserve ex-situ, regarding Sorghum genepool
- "Taxon: Sorghum bicolor (L.) Moench subsp. bicolor - information from National Plant Germplasm System/GRIN". Germplasm Resources Information Network (GRIN): GRIN Taxonomy for Plants. Beltsville Area, USA: United States Department of Agriculture Agricultural Research Service. 2008-03-05. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2008-12-12.