கோழிக்கோடு உப்பங்கழி
கோழிக்கோடு உப்பங்கழி (Kozhikode backwaters) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், கோழிக்கோட்டில் உள்ள உப்பங்கழியாகும். இது உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகளைக் கவரக்கூடிய இடமாகும். இதன் முகத்துவாரத்தில் அமைந்துள்ள எலாத்தூர் கானொலி கால்வாயும், கல்லாய் ஆறும் படகு பயணத்துக்கு ஏற்றவை. கடலுங்காடியில் உள்ள பறவைகள் புகலிடமும், நீர்திருவிழாவுக்கும், படகு போட்டிக்கும் புகழ்பெற்ற கோரப்புழாவும் சுற்றுலா பயணிகளைக் கவரும் பிற இடங்களாகும்.