கோவாவின் திருவிழா

கோவாவின் திருவிழா (Carnival in Goa) எனப்படுவது உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு சிறிய கேளிக்கை கொண்டாட்டமாகும். கோவாவில் நடைபெறும் இக் கொண்டாட்டம் இந்தியாவில் மிகப்பெரிய ஒரு நிகழ்வாகும். ஆசியாவில் நடைபெறும் சில விழாக்களில் இதுவும் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தில் இக்கொண்டாட்டம் வழக்கமாக நடைபெறுகிறது. விழாவுக்கு முன்னர் இந்நிகழ்வை கார்னிவல் என அழைத்தனர்.

கோவாவில் போர்த்துகீசிய ஆட்சி 1960 ஆம் ஆண்டுக்குப் பிறகு முடிவுக்கு வந்த பின்னர் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கிராமிய அடிப்படையிலான இத்திருவிழாவில் சில சமயங்களில் பெருமளவில் நகரமக்களும் அணிவகுத்து கலந்து கொள்கின்றனர். வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கலைக்குழுக்கள் இக்கொண்டாட்டத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. இன்றுவரை இக்கொண்டாட்டம் பாரம்பரிய முறைப்படி திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது. நடத்தப்படுகின்றன. தெற்கு கோவாவில் உள்ள சால்சீட் துணை மாவட்டத்தில் மேடைகள் அமைத்தும் தெருவோரங்களிலும் நாடகங்கள் நடத்தப்பட்டு இக்கொண்டாட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

இத் திருவிழா "கோவாவின் மிகவும் புகழ்பெற்ற திருவிழா என்று கோவா அரசாங்கத்தின் சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது. மேலும், 18 ம் நூற்றாண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது "[1].

2017 ஆம் ஆண்டு இக்கொண்டாட்டம் 25-28 தேதிகளில் நடைபெற்றது. நகர்புறப் பகுதிகளுக்கான அணிவகுப்பு கோவா தலைநகரமான பானஜியில் 25 பிப்ரவரியிலும், மட்காவ் நகரில் 26 பிப்ரவரியிலும், வாஸ்கோட காமாவில் 27 பிப்ரவரியிலும், மப்பூசாவில் 28 பிப்ரவரியிலும் நடைபெற்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Carnival". goatourism.gov.in. Goa Tourism. பார்க்கப்பட்ட நாள் 13 March 2017.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவாவின்_திருவிழா&oldid=2916366" இலிருந்து மீள்விக்கப்பட்டது