கோவா விடுதலை நாள்

கோவா விடுதலை நாள் (Goa Liberation Day) [2])ஒவ்வோர் ஆண்டும் திசம்பர் 19 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்திய ஆயுதப்படைகள் கோவாவை போர்த்துகீசிய ஆட்சியில் இருந்து விடுவித்ததை நினைவூட்டும் வகையில் கோவா விடுதலை நாள் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.[3]

கோவா விடுதலை நாள்
Goa Liberation Day
गोवा मुक्ति दिवस
இந்திய கடற்படைக் கப்பல் கோமண்டக்கில் போர் நினைவுச்சின்னம். இந்தியாவில் போர்த்துகீசிய ஆட்சியிலிருந்து அஞ்செடிவா தீவு மற்றும் கோவா, தமன் மற்றும் டியு பிரதேசங்களை விடுவிப்பதற்காக இந்திய கடற்படை 1961 ஆம் ஆண்டு மேற்கொண்ட விஜய் நடவடிக்கையில் பங்கு கொண்ட ஏழு இளம் திறமையான மாலுமிகள் மற்றும் பிற பணியாளர்களின் நினைவாக இச்சின்னம் நிறுவப்பட்டது.[1]
கடைபிடிப்போர்இந்தியர்கள், கோவா மக்கள்
முக்கியத்துவம்போர்த்துக்கீசியர்களிடமிருந்து விடுதலை
நாள்19 திசம்பர்
நிகழ்வுஒவ்வோர் ஆண்டும்
தொடர்புடையனகோவா விடுதலை இயக்கம்

பின்னணி தொகு

450 ஆண்டு கால போர்த்துக்கீசிய ஆட்சியிலிருந்து கோவா மாநிலம் 1961 ஆம் ஆண்டு திசம்பர் 19 அன்று விடுதலையடைந்தது.[4]

கொண்டாட்டம் தொகு

இத்தினத்தைக் கொண்டாடும் வகையில் மாநிலமெங்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகின்றன.[5]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவா_விடுதலை_நாள்&oldid=3599389" இலிருந்து மீள்விக்கப்பட்டது