கோவிலடி திவ்யஞானேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
கோவிலடி திவ்யஞானேசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுதிருவையாறு வட்டத்தில் பூண்டி அருகில் உள்ள கோவிலடி என்னுமிடத்தில் உள்ளது. இவ்வூர் முன்னர் திருப்பேர் நகர் என்றழைக்கப்பட்டது.
இறைவன்,இறைவி
தொகுஇங்குள்ள இறைவன் திவ்யஞானேசுவர் ஆவார். இறைவி அகிலாண்டேசுவரி ஆவார். [1]
பிற சன்னதிகள்
தொகுமுகப்பு வாயிலைக் கடந்ததும் மூலவரை தரிசிக்கலாம். வலப்புறம் இறைவி சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், பாலமுருகன் சன்னதிகள் உள்ளன. [1]