கோவை அய்யாமுத்து

காந்தியவாதி

கோவை அய்யாமுத்து (Kovai Ayyamuthu) இந்தியாவைச் சேர்ந்த ஒரு காந்தியவாதியும் சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். ஓர் எழுத்தாளராகவும் இயங்கிய இவர் கோவை காதர் அய்யாமுத்து என்ற பெயராலும் அறியப்படுகிறார். 1898 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் பிறந்தார்.[1][2][3] இந்திய தேசிய காங்கிரசின் தீவிர உறுப்பினராகவும், சர்வோதயா இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார் இவரது எழுத்துக்கள் சுதந்திர இயக்கத்திற்கு பங்களித்தன. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பலமுறை சிறை சென்றார்.[4] 1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று இவர் காலமானார்.

கோவை அய்யாமுத்து
Kovai Ayyamuthu
பிறப்புடிசம்பர் 1898
பரஞ்சேர்வழி, காங்கேயம், திருப்பூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு21 டிசம்பர் 1975
தேசியம்தமிழர்

வாழ்க்கை மற்றும் தொழில் தொகு

அய்யாமுத்து இன்றைய திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகாவில் அங்கண்ணன் கவுண்டர் மற்றும் மரக்கால் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கும் கோவிந்தம்மாளுக்கும் 1921ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அய்யாமுத்து சர்வோதயா இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்தார். ஈ.வி.ஆர் பெரியாரின் நல்ல நண்பராக இருந்ததால், சி.ராசகோபாலாச்சாரியார் வழிகாட்டியாக இருந்தார்.

இவருடைய மனைவி கோவிந்தம்மாளும் இவருடன் இணைந்து தீவிரமாக இயக்கத்தில் பங்கேற்றார். இருவரும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறையில் அடைக்கப்பட்டனர். 1924 ஆம் ஆண்டு கோவை அய்யாமுத்து வைக்கம் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். கோயம்புத்தூர் மண்டலத்தில் கதர் அமைப்பிலும் முக்கியப் பங்காற்றினார். சுதந்திரத்திற்குப் பிறகு அய்யாமுத்து, கோவிந்தம்மாள் கோயம்புத்தூர் பொள்ளாச்சி சாலையில் காந்தி பண்ணையை அமைத்தனர். தங்ககளின் வீட்டிற்கு " ராஜாஜி இல்லம் " என்று பெயரிட்டனர்.

மேற்கோள்கள் தொகு

  1. Govindarajulu, Rajesh (2014-08-14). "A couple of patriots". தி இந்து. India. பார்க்கப்பட்ட நாள் 2020-03-20.
  2. Thomas, Wilson (2019-10-01). "Mahatma Gandhi's Kovai connect". தி இந்து. India. Archived from the original on 2019-12-27. பார்க்கப்பட்ட நாள் 2020-03-20.
  3. Swaroop, Vishnu (14 November 2018). "Without museums, war veterans fade into history". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (India). https://timesofindia.indiatimes.com/city/chennai/without-museums-war-veterans-fade-into-history/articleshow/66611990.cms. 
  4. பி.தயாளன். "'அயர்வறியாத உழைப்பாளி' கோவை அ.அய்யாமுத்து!". www.keetru.com. பார்க்கப்பட்ட நாள் 2023-03-04.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_அய்யாமுத்து&oldid=3842928" இலிருந்து மீள்விக்கப்பட்டது