கோஷ்டம் (இந்துக் கோயில்)
கோஷ்டம் அல்லது கோட்டம் என்பது இந்து சமய கோயிலின் கருவறையை சுற்றி அமைந்திருக்கும் வெளிப்புறச் சுவராகும். இந்த கோஷ்டத்தில் ஆகம முறைப்படி சில இறைருவங்கள் அமைக்கப்படுகின்றன.
சிவாலயங்களில் உள்ள கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு துர்க்கை போன்ற இறைச் சிலைகள் அமைக்கப்படுகின்றன. இந்த கோஷ்டத்தில் கருவறையிலிருந்து வெளியேறுகிற அபிசேக நீர் போகும் பாதையான கோமுகியும் அமைக்கப்படுகிறது. மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பெரிய கற்றளிகளில் இவை இந்த சிற்பங்களைத் தவிற பல்வேறு சிவ மூர்த்தங்களும் அமைக்கப்படுகின்றன. சிவாலயங்களில் உள்ள கோஷ்டத்தினை "சிவாலய கருவறைக் கோஷ்டம்"[1] என்றும் "சிவாலய கோஷ்டம்" என்றும் அழைப்பர். [2]
சாக்த கோயில்கள் எனப்படும் அம்மன் கோயில்களில் பிரம்மாகி, வைஷ்ணவி போன்றோரின் சிலைகள் கோஷ்டத்தில் அமைக்கப்படுகின்றன.