கௌசல்யா சி.

இந்திய கால்பந்தாட்ட வீரர்

கௌசல்யா சிவசாமி (Kowsalya Sivasami:ஆகஸ்ட் 19,2001) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய தொழில்முறை கால்பந்து வீரர் ஆவார். இவர் இந்திய மகளிர் லீக் போட்டிகளில் சேது அணிக்காக தடுப்பாட்ட வீரராக விளையாடுகிறார்.[1] முன்னதாக, இவர் தமிழ்நாடு கால்பந்து சங்க இளையோர் மகளிர் அணி மற்றும் மதுரை மாவட்ட அணிக்காக விளையாடியுள்ளார்.[2]

கௌசல்யா சி.
Kowsalya S.
சுய தகவல்கள்
முழுப் பெயர்கௌசல்யா சிவசாமி
பிறந்த நாள்19 ஆகத்து 2001 (2001-08-19) (அகவை 23)
பிறந்த இடம்நாமக்கல், தமிழ்நாடு, இந்தியா
ஆடும் நிலை(கள்)தடுப்பாட்ட வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
சேது அணி
எண்13
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
சேது அணி
2022–2023இலார்ட்ஸ் கால்பந்து சங்கம்
2023–சேது அணி
பன்னாட்டு வாழ்வழி
இந்திய தேசிய அணி
(17 வயதுக்குட்ட்பட்டோர்)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 24 செப்டம்பர் 2023 அன்று சேகரிக்கப்பட்டது.

இளமை

தொகு

கௌசல்யா தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். நாமக்கல், லயோலா மேல்நிலைப் பள்ளியில் தனது 12 வயதில் கால்பந்து விளையாடத் தொடங்கினார். இவரது சகோதரர் பாலமுருகன் மற்றும் இவரது குடும்பத்தினரால் கால்பந்து விளையாட ஊக்குவிக்கப்பட்டார்.[3]

விளையாட்டு

தொகு

கௌசல்யா தனது 12 வயதில் தனது பள்ளியில் மூத்த அணியுடன் கால்பந்து விளையாடத் தொடங்கினார். 18 வயதுக்குட்பட்ட ஏஎஃப்சி போட்டியில் பங்கேற்ற இளையோர் இந்தியா அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.[3] சேது கால் பந்து அணிக்காக விளையாடி, 2019 ஆம் ஆண்டில் தனது 17 வயதில் சென்னையில் நடந்த போட்டியில்அறிமுகமானார். சேது அணி 2019 ஆம் ஆண்டில் இந்திய மகளிர் போட்டியை வென்ற இறுதிப் போட்டியில் மணிப்பூரை தோற்கடித்தது. இது கௌசல்யாவின் முதல் பெரிய வெற்றியாகும். ஜூன் மாதம் நடைபெற்ற 2023 ஹீரோ மூத்தோர் மகளிர் கால்பந்து போட்டியிலும் இவர் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[4]

சர்வதேசப் போட்டிகள்

தொகு

இவர் 17 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர் இந்திய அணியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Kowsalya Sivasami". www.the-aiff.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-15.
  2. 2.0 2.1 "A bigil moment for this Tamil Nadu all-girls football club". https://timesofindia.indiatimes.com/city/madurai/a-bigil-moment-for-this-tamil-nadu-all-girls-football-club/articleshow/71986118.cms. 
  3. 3.0 3.1 "Kowsalya Sivasami:". www.fistosports.com (in ஆங்கிலம்). 2019-06-12. பார்க்கப்பட்ட நாள் 2023-09-12.
  4. "Senior Women's Football Championship 2023 Final Round: Squads". Chase Your Sport (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-14.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌசல்யா_சி.&oldid=4106132" இலிருந்து மீள்விக்கப்பட்டது