கௌசல் குமார் வர்மா

இந்தியக் கணிதவியலாளர்

கௌசல் குமார் வர்மா (Kaushal Kumar Verma) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கணிதவியல் அறிஞர் ஆவார். 1971ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சிக்கலெண் பகுப்பாய்வில் நிபுணத்துவம் பெற்றிருந்தார். 1992 ஆம் ஆண்டு மும்பை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயற்பியல் பொறியியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவின் புளூமிங்டனில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் கணிதப் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றார். நியூயார்க்கில் உள்ள சிராகசு பல்கலைக்கழகத்தில் ஓராண்டு பணியாற்ரிய பிறகு அன் ஆர்பரில் இருக்கும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். 2014 ஆம் ஆண்டு கௌசல் குமார் வர்மாவிற்கு சாந்தி சுவரூப் பட்நாகர் விருது வழங்கப்பட்டது.[1][2][3][4] பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் கணிதத் துறையில் பேராசிரியராகவும் கணிதவியல் மற்றும் இயற்பியல் அறிவியல் பிரிவின் கல்வித் தலைவராகவும் உள்ளார்.[5]

கௌசல் குமார் வர்மா
Kaushal Kumar Verma
பிறப்பு1971, மார்ச்சு 7
பணிகணிதவியலாளர்
அறியப்படுவதுசிக்கலெண் பகுப்பாய்வு
விருதுகள்சாந்தி சுவரூப் பட்நாகர் விருது

மேற்கோள்கள் தொகு

  1. "Awardee Details: Shanti Swarup Bhatnagar Prize".
  2. "Shanti Swarup Bhatnagar awards for 10 scientists". BusinessLine. 26 September 2014. பார்க்கப்பட்ட நாள் 28 September 2014.
  3. "Dr. P.S.Ahuja Announces Shanti Swarup Bhatnagar Award 2014". Dr. P.S.Ahuja Announces Shanti Swarup Bhatnagar Award 2014. 26 September 2014. பார்க்கப்பட்ட நாள் 28 September 2014.
  4. Kaushal Verma at the Mathematics Genealogy Project.
  5. Srivastava, Nikita Mehta,Moulishree (2014-11-17). "The winners of Shanti Swarup Bhatnagar Awards". Mint (newspaper) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-30.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌசல்_குமார்_வர்மா&oldid=3310036" இலிருந்து மீள்விக்கப்பட்டது