கௌரி அம்பிகாதேவி சமேத கங்கேசுவரர் ஆலயம்
அருள்மிகு கௌரி அம்பிகாதேவி சமேத கங்கேஸ்வரர் தேவஸ்தானம் யாழ் கண்டி நெடுஞ்சாலையில் 155ஆம் கட்டைப் பகுதியில் வீதிக்குக் கிழக்காக வீதியுடன் அமைந்துள்ளது. 1980 ஆம் ஆண்டு வரை ஓர் இலிங்கத்தை மரத்தின் கீழ் வைத்து ஊரவர்கள் வழிபட்டு வந்தனர். பின்னர் அரசாங்கம் விவசாய ஆராய்ச்சி அலுவலர்களுக்குப் பகிர்ந்தளித்தபோது இலிங்கத்திற்கு ஓர் பந்தல் போடப்பட்டது. 1984 ஆம் ஆண்டளவில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்வதற்காக கோயில் அமைப்பு விதிகளுக்கு அமையக் கட்டப்பட்டது. 1989 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலஸ்தானத்தில் சிவலிங்கமும் வாயிலின் இருபக்கமும் பிள்ளையாரும் முருகனும் ஸ்தாபிக்கப்பட்டனர். அச்சமயத்தில் வைரவர் சூலவடிவில் வைக்கப்பட்டு இருந்தார். கோயிலுக்கான கிணறும் இக்காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. தற்போது தினமும் இருநேரப் பூசை நடைபெறுகிறது.
அருள்மிகு கௌரி அம்பிகாதேவி சமேத கங்கேஸ்வரர் தேவஸ்தானம் | |
---|---|
சிவன் கோவில் | |
ஆள்கூறுகள்: | 9°20′55.95″N 80°24′34.74″E / 9.3488750°N 80.4096500°E |
பெயர் | |
பெயர்: | சிவன் கோவில் |
அமைவிடம் | |
நாடு: | இலங்கை |
மாகாணம்: | வடமாகாணம் |
மாவட்டம்: | கிளிநொச்சி |
அமைவு: | கிளிநொச்சி, பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சிவன் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |