கௌரி சங்கர் பாண்டே

இந்திய அரசியல்வாதி

கௌரி சங்கர் பாண்டே (Gauri Shankar Pandey) மூத்த இந்திய அரசியல்வாதியும் பீகாரின் முன்னாள் அமைச்சரும் ஆவார். பீகார் சட்டமன்றத்தில் பெத்தியா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். பல்வேறு அமைச்சர் பதவிகளில் பணியாற்றினார்.

கௌரி சங்கர் பாண்டே
Gauri Shankar Pandey (Malikaar)
பீகார் மாநில முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர், கலால் வரி, சுற்றுச்சூழல், வனம்.
பெத்தியா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1969, 1977, 1982, 1985
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 ஆகத்து 1935 (1935-08-09) (அகவை 89)
பெத்தியா, பீகார்
பிள்ளைகள்5 மகன்கள் மற்றும் 3 மகள்கள்
வாழிடம்(s)பெத்தியா, பைத்தானியா

பீகாரைச் சேர்ந்த காங்கிரசு கட்சியின் பிரபலமான தலைவராக இருந்தார். எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட இவரது சமூக சேவைகள், எளிமை மற்றும் நேர்மைக்காக இவரை மதிக்கிறார்கள். தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தனது சொந்த கிராமமான பைத்தானியாவில் (பெத்தியாவுக்கு அருகில்) தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு சேவை செய்தார்

பீகார் சட்டமன்ற உறுப்பினர்

தொகு

கௌரி சங்கர் பாண்டே 1969-72, 1977-82, 1982-85, மற்றும் 1985-90 பெத்தியா தொகுதியில் வெற்றி பெற்று பீகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். சாலை, போக்குவரத்து, சிவில் விமானப் போக்குவரத்து, சட்டம், கலால், சுற்றுச்சூழல் மற்றும் காடு உள்ளிட்ட பல அமைச்சர் பதவிகளை அடுத்தடுத்த பீகார் அரசாங்கங்களில் வகித்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Affidavit details of Gauri Shankar Pandey". Empowering India.org.
  2. "Statistical Report on General Election, 1977 to the Legislative Assembly of Bihar" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம்.
  3. "State Elections 2005 - Partywise comparison since 1977". Election Commission of India. Archived from the original on 28 September 2011. பார்க்கப்பட்ட நாள் 8 February 2011.
  4. "Statistical Report on General Election, 1985 to the Legislative Assembly of Bihar" (PDF). Election Commission of India.
  5. "Statistical Report on legislative Assembly of Bihar". Election Commission of India.
  6. "Statistical Report on legislative Assembly of Bihar,2000". Election Commission of India.
  7. "Statistical Report on legislative Assembly of Bihar,2005". Election Commission of India.
  8. "Gauri Shankar Pandey, Member of Bihar Assembly". Travel India Guide.com. Archived from the original on 8 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 15 December 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரி_சங்கர்_பாண்டே&oldid=4109392" இலிருந்து மீள்விக்கப்பட்டது