பெத்தியா
பெத்தியா (Bettiah), வட இந்தியாவின் பிகார் மாநிலத்தின் வடக்கில் நேபாளம் நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்த மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[3]இது மாநிலத் தலைநகரான பாட்னாவுக்கு வடக்கே 225 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
பெத்தியா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 26°48′05″N 84°30′10″E / 26.80139°N 84.50278°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பிகார் |
மாவட்டம் | மேற்கு சம்பாரண் |
தோற்றுவித்தவர் | கணேஷ்வர் தேவ் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | பெத்தியா நகராட்சி |
பரப்பளவு | |
• நகரம் | 24 km2 (9 sq mi) |
• நகர்ப்புறம் | 64 km2 (25 sq mi) |
ஏற்றம் | 65 m (213 ft) |
மக்கள்தொகை (2011) | |
• நகரம் | 1,32,209 |
• தரவரிசை | 14வது (பிகார்) |
• அடர்த்தி | 5,500/km2 (14,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி[1] |
• வட்டார மொழி | போச்புரி[2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 845 438 |
BTH | 06254 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-BR |
வாகனப் பதிவு | BR-22 |
பாலின விகிதம் | 53% male : 47% female ♂/♀ |
இணையதளம் | westchamparan |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 39 வார்டுகளும், 24,463 வீடுகளும் கொண்ட பெத்தியா நகரத்தின் மக்கள் தொகை 132,209 ஆகும். அதில் ஆண்கள் 69,529 மற்றும் பெண்கள் 62,680 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 901 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 80.6% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 8,266 மற்றும் 828 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 64.08%, இசுலாமியர் 33.72%, கிறித்தவர்கள் 1.9% மற்றும் பிறர் 0.30% ஆகவுள்ளனர்.[4]
போக்குவரத்து
தொகுஇரயில் நிலையம்
தொகுபெத்தியா இரயில் நிலையம்[5]பாட்னா, தில்லி, மும்பை, கொல்கத்தா, குவஹாத்தி அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், ஜம்மு போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.
சாலைகள்
தொகுதேசிய நெடுஞ்சாலை 727, 139W, 28பி மற்றும் மாநில நெடுஞ்சாலை எண் 54 பெத்தியா நகரத்தின் வழியாகச் செல்கிறது.
வானூர்தி நிலையம்
தொகுஇதனருகே அமைந்த வானூர்தி நிலையம், 97 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குசிநகர் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செயப் பிரகாஷ் நாராயண் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.
கல்வி
தொகு- அரசு மருத்துவக் கல்லூரி, பெத்தியா
- அரசு பொறியியல் கல்லூரி, மேற்கு சம்பாரண்
- மகாராணி ஜானகி குன்வர் கலூரி, பெத்தியா[6]
- ராம் லக்கன் சிங் யாதவ் கல்லூரி, பெத்தியா
- குலாப் நினைவுக் கல்லூரி, பெத்தியா
தட்ப வெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், பெத்தியா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 23.28 (73.9) |
26.33 (79.4) |
32.39 (90.3) |
37.28 (99.1) |
38.72 (101.7) |
37.2 (99) |
33.5 (92.3) |
32.83 (91.1) |
33.28 (91.9) |
32.28 (90.1) |
29.22 (84.6) |
24.56 (76.2) |
31.72 (89.1) |
தினசரி சராசரி °C (°F) | 16.17 (61.1) |
18.67 (65.6) |
24.17 (75.5) |
29.22 (84.6) |
31.7 (89) |
31.7 (89) |
29.61 (85.3) |
29.11 (84.4) |
28.94 (84.1) |
26.61 (79.9) |
21.89 (71.4) |
17.39 (63.3) |
25.44 (77.8) |
தாழ் சராசரி °C (°F) | 9.06 (48.3) |
11.06 (51.9) |
16.06 (60.9) |
21.22 (70.2) |
24.56 (76.2) |
26.17 (79.1) |
25.72 (78.3) |
25.44 (77.8) |
24.61 (76.3) |
21 (69.8) |
14.56 (58.2) |
10.22 (50.4) |
19.17 (66.5) |
பொழிவு mm (inches) | 13 (0.5) |
13 (0.5) |
10 (0.4) |
18 (0.7) |
46 (1.8) |
196 (7.7) |
378 (14.9) |
356 (14) |
226 (8.9) |
66 (2.6) |
5 (0.2) |
5 (0.2) |
1,331 (52.4) |
சராசரி பொழிவு நாட்கள் | 1.4 | 1.1 | 1.1 | 1.0 | 2.1 | 5.4 | 10.9 | 11.9 | 7.3 | 2.4 | 0.6 | 0.7 | 45.7 |
ஆதாரம்: Weatherbase[7] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 23 March 2019.
- ↑ "Bhojpuri". Ethnologue (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 September 2020.
- ↑ "Tirhut Division". tirhut-muzaffarpur.bih.nic.in. Archived from the original on 16 March 2015.
- ↑ Bettiah Population, Religion, Caste, Working Data Pashchim Champaran, Bihar - Census 2011
- ↑ Bettiah railway station
- ↑ "Public Utilities". Official Website of West Champaran | India. பார்க்கப்பட்ட நாள் 3 May 2022.
- ↑ "Weatherbase.com". Weatherbase. 2015. Archived from the original on 4 மார்ச்சு 2016. Retrieved on 27 August 2015.