கௌளை
கௌளை இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3வது சக்கரத்தின் 3 வது மேளமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும். இது ஔடவ- வக்ர ஷாடவ இராகம் ஆகும். இது உபாங்க இராகம் ஆகும்.
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ ரி1 ம1 ப நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 ப ம1 ரி1 க3 ம1 ரி1 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இதர அம்சங்கள்
தொகு- ஆரோகணத்தில் க, த வர்ஜம். அவரோகணத்தில் த மட்டும் வர்ஜம்.
- ஏகசுருதி ரிஷபம், இந்த இராகத்தின் தனித்தன்மையைக் காட்டுகின்றது. இதற்கு கௌளை ரிஷபம் என்றே பெயர்.
- கன பஞ்சக இராகங்களாகிய நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, சிறீ ஆகியவற்றில் இது 2 ஆவதாக வருகின்றது.
- தானம் அல்லது மத்திமகால ஆலாபனை இசைக்கும் பொழுது இவ்விராகத்தின் சாயை நன்கு வெளிப்படுகின்றது.
- பல இசை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பழமையான இராகம் இது ஆகும். (கௌடை என்று முன்பு அழைக்கப்பட்டுள்ளது).
வகை | உருப்படி | தாளம் | கலைஞர் |
---|---|---|---|
வர்ணம் | செலிமி கோரி | ஆதி | வீணை குப்பையர் |
வர்ணம் | பலுமாருநாடோ | அட | வீணை குப்பையர் |
பஞ்சரத்தின கீர்த்தனை | துடுகுகல | ஆதி | தியாகராஜர் |
கீதம் | பூரணியே | ஆதி | அருணாச்சல அண்ணாவியார் |
கிருதி | ப்ரணமாம்யகம் | ஆதி | மைசூர் வாசுதேவச்சாரியார் |
கிருதி | ஆண்டருள்வாய் | ஆதி | தண்டபாணி தேசிகர் |
கிருதி | சரணாகதம் என்று | ஆதி | கோபாலகிருஷ்ண பாரதியார் |
கிருதி | ஸ்ரீமஹா கணபதி | திரிபுடை | முத்துசுவாமி தீட்சிதர் |
கிருதி | பவக்கடல் தாண்டிட | ஆதி | பெரியசாமித் தூரன் |
திரையிசையில்
தொகு- வேதம் நீ புதிய நாதம் நீ ... - கோயில் புறா
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.