க. இராமச்சந்திரா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
க. இராமச்சந்திரா (இறப்பு: ஏப்ரல் 26, 1976) ஈழத்துத் தமிழறிஞர். தமிழிலும், ஆங்கிலத்திலும் ஏராளமான கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியவர். தமிழில் செய்யுள்கள் பலவற்றை இயற்றியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇராமச்சந்திரா யாழ்ப்பாணம், நயினாதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கதிரேசுவின் புதல்வர். பிற்காலத்தில் கொழும்பில் வாழ்ந்தார். இலங்கை அரசாங்கத் தொடருந்து சேவைப் பகுதியில் உயரதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
பத்திரிகாசிரியர்
தொகுReligious Digest என்ற ஆங்கில சமய இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆத்மஜோதி ஆன்மிக இதழின் கௌரவ ஆசிரியராகவும் இவர் சேவையாற்றினார்.
சமூகப் பணி
தொகுகொழும்பில் அரசப் பணியாளர்களிடையே சமய நிகழ்ச்சிகளை நடத்தினார். இரமண மகரிசியைத் தமது குருவாகக் கொண்டார். "ரமணசரணானந்தன்" என்று அழைக்கப்பட்டார். உலக சைவ மாநாடுகள் பலவற்றில் கலந்து கொண்டார்.
எழுதிய நூல்கள்
தொகு- பகவான் சிறீ இரமண மகரிஷிகளின் அவதார மகிமையும், சன்னிதானப் பெருமையும் (1942)
- ரமணத்தியானம்
- ரமண ஸ்தோத்திர மஞ்சரி
- ஆதி சங்கரரின் அவதார மகிமையும், அவர் காட்டிய அருள் நெறியும்
- அன்னை கிருஷ்ணாபாய்
- பெரியார் தோத்திர மஞ்சரி (1948)
- பெரியார் அர்ச்சனமாலை
- சமரச ஞானக்கோவை
- உதிர்ந்த மலர்கள்
- முருகன் புகழ்மாலை
- கதிர்காமப் பதிகம் (1961)
- செல்வச் சந்நிதிப் பதிகம்
- Hinduism in a Nutshell
- In the Company of Saints
- Religions of the Tamils - Past and Present
- The message of Saint Thayumanavar
- Astrology as a Science - A Challenge to Church and Scientists
மேற்கோள்கள்
தொகு- பூலோகசிங்கம், பொ., இந்துக்கலைக் களஞ்சியம், பகுதி 1, 1990, கொழும்பு