க. இரா. பழனிசுவாமி

கள்ளிப்பட்டி இராமசாமி பழனிசுவாமி (K. R. Palaniswamy) என்பவர் பத்மசிறீ விருதுபெற்ற இந்திய இரைப்பை குடல் மருத்துவர் ஆவார். மருத்துவக் கல்வியாளர் மற்றும் எழுத்தாளரான பழனிசுவாமி சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் ஆவார்.[1][2] இவர் இந்தியன் இரைப்பைக் குடலியல் சமூகத்தின் முன்னாள் தலைவர் (2004-05)[3] மற்றும் அதன் தமிழ்நாடு பிரிவின் புரவலர் ஆவார்.[4]

க. இரா. பழனிசுவாமி
பிறப்புதமிழ்நாடு, இந்தியா
பணிஇரைப்பைக் குடலியல் மருத்துவர்
மருத்துவக் கல்வியாளர்
அறியப்படுவதுஇரைப்பைக் குடலியல்
வாழ்க்கைத்
துணை
பத்மினி
விருதுகள்பத்மசிறீ

கல்வி & பணி தொகு

பழனிசுவாமி, 1972-ல் கர்நாடக மாநிலம் தாவண்கரே ஜே. ஜே. எம். மருத்துவக் கல்லூரியில் (மைசூர் பல்கலைக்கழகம்) இளநிலை மருத்துவப் பட்டம் பெற்றார். இதன் பிறகு, 1977-ல் பொது மருத்துவத்தில் முதுநிலைப் பட்டத்தையும், 1981-ல் இரையகக் குடலியவியலில் பட்டங்களைச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம், பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டே பெற்றார்.[5] 1986-ல், உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தபோது, சென்னையில் உள்ள இசுடான்லி மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். இங்கு இவர் இரைப்பை குடல் மருத்துவர் துறையை நிறுவினார்.[3]

இரைப்பைக் குடலியல் குறித்துப் பல கட்டுரைகளை எழுதியுள்ள பழனிசாமி,[6][7] 1986 முதல் 1996 வரை சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் கழகத்தின் கல்வி வாரியத்தின் உறுப்பினராகவும், 1997-ல் தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார். 1986-ல் ஜெர்மனிக்கும் 1987-ல் சோவியத் ஒன்றியத்திற்கும் கல்வி பரிமாற்ற திட்டங்களுக்கான இந்தியப் பிரதிநிதி குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். 2014-ல்[8] இந்திய இரைப்பை குடலியல் மருத்துவ சமூகத்தின் இடைக்கால மாநாட்டிற்குத் தலைமை தாங்கி நடத்தினார். இவர் இந்திய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சங்கத்தின் தேசிய பேராசிரியராகவும் பணியாற்றுகிறார்.[9]

விருது & பெருமை தொகு

கிளாஸ்கோவின் ராயல் மருத்துவக் கல்லூரியின் சகாவான இவருக்கு 2014ஆம் ஆண்டில்[10] தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவியல் முனைவர் பட்டம் வழங்கியது. மருத்துவ அறிவியலுக்கான இவரது பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2007ஆம் ஆண்டில் பத்மசிறீ என்ற நான்காவது உயரிய குடிமகன் விருதை இவருக்கு வழங்கியது.[11]

குடும்பம் தொகு

பழனிசுவாமியின் மனைவி பெயர் பத்மினி என்பதாகும். இவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Dr Palaniswamy K R". Apollo Hospitals. 2016. பார்க்கப்பட்ட நாள் 26 August 2016.
  2. "Apollo launches Centre for Colorectal Diseases". Indian Express. 21 June 2016. பார்க்கப்பட்ட நாள் 26 August 2016.
  3. 3.0 3.1 3.2 "President, President, Indian Society of Gastro Indian Society of Gastroenterology" (PDF). MedIndia. 2016. Archived from the original (PDF) on 5 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 26 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Patrons". CMC Vellore. 2011. பார்க்கப்பட்ட நாள் 26 August 2016.
  5. "Dr. Palaniswamy K R - Apollo Chennai" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-20.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Thavaredevarakoppalu Manje Gowda Amruthesh; Paramasivan Piramanayagam; Kallipatti Ramasamy Palaniswamy; Rama Mani (2011). "An Unusual Cause for Iron Deficiency Anemia in an Elderly Male". Journal of Digestive Endoscopy 2 (4): 234–35. http://www.sgei.co.in/journal/oct-dec-2011/234.pdf. பார்த்த நாள்: 2022-03-20. 
  7. Mohan K V K; Thyagarajan S P; Murugavel K G; Mathews S; Jayanthi V; Rajanikanth; Srinivas V; Mathiazhagan et al. (1999). "Significance of recombinant immunoblot assay (RIBA 3.0)reactivity pattern in the diagnosis of HCV infection". Biomédicine 19 (1): 15–21. http://medind.nic.in/imvw/imvw6015.html. பார்த்த நாள்: 2022-03-20. 
  8. "Mid-Term ISG Conference, 2014" (PDF). VGM Hospitals. 2016. Archived from the original (PDF) on 9 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 26 August 2016.
  9. "National Faculty Details". Indian Society of Organ Transplantation. 2016. Archived from the original on 5 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 26 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Awards and Accolades". Apollo Hospitals. 2016. பார்க்கப்பட்ட நாள் 26 August 2016.
  11. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2013. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 20 August 2016.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._இரா._பழனிசுவாமி&oldid=3928426" இலிருந்து மீள்விக்கப்பட்டது