க. சா. அரியநாயகம்

க. சா. அரியநாயகம் (கபிரியல் சாமிநாதன் அரியநாயகம், 1934 - மே 9, 2000) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர்.

வாழ்க்கை தொகு

இவர் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கல்முனை கிறிஸ்தவக் கல்லூரியில் கல்வி பயின்றவர். பிரித்தானியக் கடற்படையில் பொறியியல் பிரிவில் பணியாற்றியவர். இவரது இரு புதல்வர்கள் ஈழப்போராட்டத்தில் இணைந்து மாவீரர்களானவர்கள்.

எழுத்துலகில் தொகு

இவர் ஆரம்பத்தில் பிரித்தானியக் கடற்படையில் பொறியியல் பிரிவில் பணியாற்றி இருந்தாலும், எழுத்தின் மீதான ஆர்வத்தினால் குறுகிய காலத்தில் அப்பணியை விடுத்து தேசாபிமானி பத்திரிகையுடன் இணைந்து கொண்டார். தொடர்ந்த காலங்களில் தினகரன் பத்திரிகைக்கு ஏராளமான சிறுகதைகளும், கட்டுரைகளும் எழுதி வந்தார். இரண்டாம் ஈழப்போரின் ஆரம்பத்துடன் திருமலையிலிருந்து இடம்பெயர்ந்து சுதந்திரபுரம், உடையார் கட்டில் வசித்து வந்தார். இவர் எழுதிச் சேர்த்து வைத்திருந்த பல படைப்புகளையும், நூல்களையும் இவ் இடப்பெயர்வுகளின் போது கடலிலே தொலைத்து விட்டு வருந்திக் கொண்டிருந்தார். 1997 இன் பிற்பகுதியில் ஈழநாடு பத்திரிகைக்கு எழுதத் தொடங்கியதன் மூலம் இலக்கிய உலகில் மீள் பிரவேசம் செய்த இவர் மிகக் குறுகிய காலத்தில் சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் என நிறையவே எழுதியதுடன், தனது இறுதிக்காலம் வரை தீவிரமாகவும் எழுதிக் கொண்டிருந்தார். இவரது இறுதிப் படைப்பு இரண்டு தலைமுறைகள் என்ற நாவல்.

வெளி வந்த நூல்களில் சில தொகு

  • இரண்டு தலைமுறைகள் (நாவல்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._சா._அரியநாயகம்&oldid=3459429" இலிருந்து மீள்விக்கப்பட்டது