க. தீ. சிங் அறக்கட்டளை
க. தீ. சிங் அறக்கட்டளை (K D Singh Foundation) என்பது பெண்கள் அதிகாரம், கல்வி மற்றும் சுகாதாரத்தை ஆதரிக்கும் ஓர் இந்தியத் தனியார் அறக்கட்டளை ஆகும். இது மார்ச் 2013-இல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் க. தீ. சிங். அவர்களால் நிறுவப்பட்டது.
உருவாக்கம் | 2013 |
---|---|
நிறுவனர் | கன்வர் தீப் சிங் |
வகை | தனியார் அமைப்பு |
நோக்கம் | பெண்களுக்கு அதிகாரமளித்தல், கல்வி, & நலம் |
தலைமையகம் | |
சேவைப் பகுதி | உலகம் முழுவதும் |
முழக்கம் | ஈடுபாடு |
வலைத்தளம் | [1] |
அமைப்பு
தொகுக. தீ. சிங் அறக்கட்டளையின் தலைமையகம் அரியானாவின் குர்கானில் உள்ளது.
இது பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பியவர்களுக்கு மருத்துவ, சட்ட மற்றும் மறுவாழ்வு உதவிகளை வழங்குவதற்காக அவர்களுக்கு நீதியைப் பெறவும் அவர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும் உதவுகிறது. அரியானாவில் 17 மாவட்டங்களில் 113 கற்பழிப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு நவம்பர் 2013க்குள் கற்பழிப்பு பிரிவு உதவி வழங்கியது.
அரியானா கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான ஆலோசனைகள், தாய்வழி ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வுப் பட்டறைகள், மருத்துவ முகாம்கள் மற்றும் கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான சமூக முயற்சிகளின் பிற செயல்பாடுகளையும் இந்த அறக்கட்டளை செயல்படுத்தி வருகின்றது.
திட்டங்கள்
தொகுகற்பழிப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு பிரிவு
தொகுக. தீ. சிங் அறக்கட்டளையானது கற்பழிப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவுப் பிரிவை நிறுவியது. இது கற்பழிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிவான ஆதரவை வழங்குகிறது. இதில் சேவை அரியானா மட்டுமின்றி பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை உயிர் பிழைத்தவர்களுக்குச் சட்டரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும், நிதி ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் உதவுகிறது.
இளைஞர் ஆலோசனை மையம்
தொகுதிறன் மேம்பாட்டிற்கான பிரத்தியேக மையங்களின் எண்ணிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கல்வியின் வீழ்ச்சியும் பல இளைஞர்களை வேலையில்லாமல் ஆக்குகிறது. அறக்கட்டளை மேம்பாட்டு நோக்கத்துடன் இந்த இளைஞர்களுக்கான ஆலோசனைகளை வழங்குகிறது.[1] இந்த அறக்கட்டளை அரியானாவில் உள்ள ஆதரவற்ற இளைஞர்களுக்கு இலவசக் கல்வியை வழங்குவதற்காக கான் அகாதமியுடன் இணைந்து செயல்படுகிறது.
கல்வி உதவித்தொகை
தொகுசண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பெண் மாணவர்களுக்கு கே. டி. சிங் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெண் கல்வி, மேம்பாட்டு ஆய்வுகள் அல்லது அமைதிப் படிப்புகளைத் தொடரும் குறைந்த வசதியினைப் பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கானது. உதவித்தொகை மாணவர்களின் பட்டப்படிப்பு தேவைகளை நிறைவு செய்யக் கல்விக் கட்டணத்தை வழங்குவதை உள்ளடக்கியது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Youth Counselling Center". Kdsinghfoundation.in. 2013-10-29. Archived from the original on 13 November 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-11-13.
- ↑ "Panjab University". Kdsinghfoundation.in. 2013-10-29. Archived from the original on 11 November 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-11-13.